This page preserves the source-defined decade 5, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் * பெரிய பாரதம் கைசெய்து * ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் * செய்து போன மாயங்களும் **
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை * நின்று நின்று உருக்கி உண்கின்ற * இச்
சிறந்த வான் சுடரே! * உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட * பிள்ளைத் தேற்றமும் * பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் * செய்த நின் சிறுச் சேவகமும் **
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள * நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க *
பையவே நிலையும் வந்து * என் நெஞ்சை உருக்குங்களே (3)
நின்ற ஆறும் இருந்த ஆறும் * கிடந்த ஆறும் நினைப்பு அரியன *
ஒன்று அலா உருவு ஆய் * அருவு ஆய நின் மாயங்கள் **
நின்று நின்று நினைக்கின்றேன் * உன்னை எங்ஙனம் நினைகிற்பன்? * பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் * உலகம் உண்ட ஒண் சுடரே (6)
ஒண் சுடரோடு இருளுமாய் * நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து * என்
கண் கொளாவகை * நீ கரந்து என்னைச் செய்கின்றன **
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் * என் கரிய மாணிக்கமே * என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் * அருளாய் உன் திரு உருவே (7)
திரு உருவு கிடந்த ஆறும் * கொப்பூழ்ச் செந்தாமரைமேல் * திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து * படைத்திட்ட கருமங்களும் **
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும் * என் நெஞ்சம் நின்று நெக்கு *
அருவி சோரும் கண்ணீர் * என் செய்கேன் அடியேனே? (8)
கூடி நீரைக் கடைந்த ஆறும் * அமுதம் தேவர் உண்ண * அசுரரை
வீடும் வண்ணங்களே * செய்து போன வித்தகமும் **
ஊடு புக்கு எனது ஆவியை * உருக்கி உண்டிடுகின்ற * நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் * நச்சு நாகு அணையானே (10)