Corpus pasurams 3321–3331

This page preserves the source-defined decade 5, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 531 · corpus 3321

Pasuram 531

Study resources at Uveda
மான் ஏய் நோக்கு நல்லீர் * வைகலும் வினையேன் மெலிய *
 வான் ஆர் வண் கமுகும் * மது மல்லிகை கமழும் **
 தேன் ஆர் சோலைகள் சூழ் * திருவல்லவாழ் உறையும்
 கோனாரை * அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? * (1)

Pasuram 532 · corpus 3322

Pasuram 532

Study resources at Uveda
என்று கொல் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
 பொன்திகழ் புன்னை மகிழ் * புது மாதவி மீது அணவி **
 தென்றல் மணம் கமழும் * திருவல்லவாழ் நகருள்
 நின்ற பிரான் * அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)

Pasuram 533 · corpus 3323

Pasuram 533

Study resources at Uveda
சூடு மலர்க்குழலீர்! துயராட்டியேன் மெலிய *
 பாடும் நல் வேத ஒலி * பரவைத் திரை போல் முழங்க **
 மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் * தண் திருவல்லவாழ் *
 நீடு உறைகின்ற பிரான் * கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)

Pasuram 534 · corpus 3324

Pasuram 534

Study resources at Uveda
நிச்சலும் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
 பச்சிலை நீள் கமுகும் * பலவும் தெங்கும் வாழைகளும் **
 மச்சு அணி மாடங்கள் மீது அணவும் * தண் திருவல்லவாழ் *
 நச்சு அரவின் அணைமேல் * நம்பிரானது நல் நலமே (4)

Pasuram 535 · corpus 3325

Pasuram 535

Study resources at Uveda
நல் நலத் தோழிமீர்காள் * நல்ல அந்தணர் வேள்விப் புகை *
 மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் * தண் திருவல்லவாழ் **
 கன்னல் அம் கட்டி தன்னைக் * கனியை இன் அமுதம் தன்னை *
 என் நலம் கொள் சுடரை * என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)

Pasuram 536 · corpus 3326

Pasuram 536

Study resources at Uveda
காண்பது எஞ்ஞான்றுகொலோ * வினையேன் கனிவாய் மடவீர் *
 பாண் குரல் வண்டினொடு * பசுந் தென்றலும் ஆகி எங்கும் **
 சேண் சினை ஓங்கு மரச் * செழுங் கானல் திருவல்லவாழ் *
 மாண் குறள் கோலப் பிரான் * மலர்த் தாமரைப் பாதங்களே? (6)

Pasuram 537 · corpus 3327

Pasuram 537

Study resources at Uveda
பாதங்கள்மேல் அணி * பூந் தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர் *
 ஓத நெடுந் தடத்துள் * உயர் தாமரை செங்கழுநீர் **
 மாதர்கள் வாள் முகமும் * கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் *
 நாதன் இஞ் ஞாலம் உண்ட * நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)

Pasuram 538 · corpus 3328

Pasuram 538

Study resources at Uveda
நாள்தொறும் வீடு இன்றியே * தொழக் கூடுங்கொல் நல் நுதலீர் *
 ஆடு உறு தீங் கரும்பும் * விளை செந்நெலும் ஆகி எங்கும் **
 மாடு உறு பூந் தடம் சேர் * வயல் சூழ் தண் திருவல்லவாழ் *
 நீடு உறைகின்ற பிரான் * நிலம் தாவிய நீள் கழலே? (8)

Pasuram 539 · corpus 3329

Pasuram 539

Study resources at Uveda
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு * கைதொழக் கூடுங்கொலோ *
 குழல் என்ன யாழும் என்னக் * குளிர் சோலையுள் தேன் அருந்தி **
 மழலை வரி வண்டுகள் இசை பாடும் * திருவல்லவாழ் *
 சுழலின் மலி சக்கரப் பெருமானது * தொல் அருளே? (9)

Pasuram 540 · corpus 3330

Pasuram 540

Study resources at Uveda
தொல் அருள் நல் வினையால் * சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள் *
 தொல் அருள் மண்ணும் விண்ணும் * தொழ நின்ற திருநகரம் **
 நல் அருள் ஆயிரவர் * நலன் ஏந்தும் திருவல்லவாழ் *
 நல் அருள் நம் பெருமான் * நாராயணன் நாமங்களே? (10)

Pasuram 541 · corpus 3331

Pasuram 541

Study resources at Uveda
நாமங்கள் ஆயிரம் உடைய * நம் பெருமான் அடிமேல் *
 சேமம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த **
 நாமங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும் திருவல்லவாழ் *
 சேமம் கொள் தென் நகர்மேல் * செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.