Pasuram 553 · corpus 3343
Pasuram 553
வைகல் பூங் கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
செய் கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் **
கை கொள் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
கைகள் கூப்பி சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே (1)
Nammazhvar · Pasurams 553–563
Corpus pasurams 3343–3353
This page preserves the source-defined decade 6, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 553 · corpus 3343
வைகல் பூங் கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
செய் கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் **
கை கொள் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
கைகள் கூப்பி சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே (1)
Pasuram 554 · corpus 3344
காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கரு நாராய் *
வேத வேள்வி ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட * நம் பெருமானைக் கண்டு *
பாதம் கைதொழுது பணியீர் * அடியேன் திறமே (2)
Pasuram 555 · corpus 3345
திறங்கள் ஆகி எங்கும் * செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள் *
சிறந்த செல்வம் மல்கு * திருவண்வண்டூர் உறையும் **
கறங்கு சக்கரக் கைக் * கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
இறங்கி நீர் தொழுது பணியீர் * அடியேன் இடரே (3)
Pasuram 556 · corpus 3346
இடர் இல் போகம் மூழ்கி * இணைந்து ஆடும் மட அன்னங்காள் *
விடல் இல் வேத ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
கடலின் மேனிப்பிரான் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
உடலம் நைந்து ஒருத்தி * உருகும் என்று உணர்த்துமினே (4)
Pasuram 557 · corpus 3347
உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மட அன்னங்காள் *
திணர்த்த வண்டல்கள்மேல் * சங்கு சேரும் திருவண்வண்டூர் **
புணர்த்த பூந் தண் துழாய் முடி * நம் பெருமானைக் கண்டு *
புணர்த்த கையினராய் * அடியேனுக்கும் போற்றுமினே (5)
Pasuram 558 · corpus 3348
போற்றி யான் இரந்தேன் * புன்னைமேல் உறை பூங் குயில்காள் *
சேற்றில் வாளை துள்ளும் * திருவண்வண்டூர் உறையும் **
ஆற்றல் ஆழி அங்கை * அமரர் பெருமானைக் கண்டு *
மாற்றம் கொண்டருளீர் * மையல் தீர்வது ஒருவண்ணமே (6)
Pasuram 559 · corpus 3349
ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே *
செரு ஒண் பூம் பொழில் சூழ் * செக்கர் வேலைத் திருவண்வண்டூர் **
கரு வண்ணம் செய்ய வாய் * செய்ய கண் செய்ய கை செய்ய கால் *
செரு ஒண் சக்கரம் சங்கு * அடையாளம் திருந்தக் கண்டே (7)
Pasuram 560 · corpus 3350
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் * ஒண் சிறு பூவாய் *
செருந்தி ஞாழல் மகிழ் * புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் **
பெரும் தண் தாமரைக்கண் * பெரு நீள் முடி நால் தடந்தோள் *
கருந் திண் மா முகில் போல் * திருமேனி அடிகளையே (8)
Pasuram 561 · corpus 3351
அடிகள் கைதொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் *
விடிவை சங்கு ஒலிக்கும் * திருவண்வண்டூர் உறையும் **
கடிய மாயன் தன்னைக் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
கொடிய வல்வினையேன் * திறம் கூறுமின் வேறுகொண்டே (9)
Pasuram 562 · corpus 3352
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் *
தேறு நீர்ப் பம்பை * வடபாலைத் திருவண்வண்டூர் **
மாறு இல் போர் அரக்கன் * மதிள் நீறு எழச் செற்று உகந்த *
ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே (10)
Pasuram 563 · corpus 3353
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் * அகல் ஞாலம் கொண்ட *
வன் கள்வன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் * திருவண்வண்டூர்க்கு *
இன்கொள் பாடல் வல்லார் * மதனர் மின்னிடை யவர்க்கே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.