This page preserves the source-defined decade 5, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் *
என்னை முனியாதே *
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
மின்னு நூலும் குண்டலமும் *
மார்பில் திருமறுவும் *
மன்னு பூணும் நான்கு தோளும் *
வந்து எங்கும் நின்றிடுமே (2)
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று *
அன்னையரும் முனிதிர் *
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
தொக்க சோதித் தொண்டை வாயும் *
நீண்ட புருவங்களும் *
தக்க தாமரைக் கண்ணும் * பாவியேன்
ஆவியின் மேலனவே * (5)
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று *
அன்னை காண கொடாள் *
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
கோல நீள் கொடி மூக்கும் * தாமரைக்
கண்ணும் கனி வாயும் *
நீல மேனியும் நான்கு தோளும் *
என் நெஞ்சம் நிறைந்தனவே * (6)
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று *
அன்னை காண கொடாள் *
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த *
நீண்ட பொன் மேனியொடும் *
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான் *
நேமி அங்கை உளதே (7)
முன் நின்றாய் என்று தோழிமார்களும் *
அன்னையரும் முனிதிர் *
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
சென்னி நீள் முடி ஆதி ஆய *
உலப்பு இல் அணிகலத்தன் *
கன்னல் பால் அமுது ஆகி வந்து * என்
நெஞ்சம் கழியானே (9)
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று *
அன்னை காண கொடாள் *
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
குழுமித் தேவர் குழாங்கள் * கைதொழச்
சோதி வெள்ளத்தினுள்ளே *
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் *
ஆர்க்கும் அறிவு அரிதே * (10)
அறிவு அரிய பிரானை *
ஆழி அங்கையனையே அலற்றி *
நறிய நன் மலர் நாடி *
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன **
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் *
திருக்குறுங்குடி அதன்மேல் *
அறியக் கற்று வல்லார்
வைட்டவர் * ஆழ் கடல் ஞாலத்துள்ளே * (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.