Corpus pasurams 3288–3298

This page preserves the source-defined decade 5, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 498 · corpus 3288

Pasuram 498

Study resources at Uveda
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
 கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
 கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
 கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் **
 கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
 கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ? *
 கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
 கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? * (1)

Pasuram 499 · corpus 3289

Pasuram 499

Study resources at Uveda
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் *
 கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் *
 கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் *
 கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் **
 கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் *
 கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? *
 கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் *
 கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? * (2)

Pasuram 500 · corpus 3290

Pasuram 500

Study resources at Uveda
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் *
 காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் *
 காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் *
 காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும் **
 காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் *
 காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
 காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
 காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? * (3)

Pasuram 501 · corpus 3291

Pasuram 501

Study resources at Uveda
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் *
 செய்வான் நின்றனகளும் யானே என்னும் *
 செய்து முன் இறந்தவும் யானே என்னும் *
 செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் **
 செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் *
 செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ? *
 செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
 செய்ய கனி வாய் இள மான் திறத்தே? * (4)

Pasuram 502 · corpus 3292

Pasuram 502

Study resources at Uveda
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் *
 திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் *
 திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் *
 திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் **
 திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் *
 திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
 திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
 திறம்பாது என் திருமகள் எய்தினவே? * (5)

Pasuram 503 · corpus 3293

Pasuram 503

Study resources at Uveda
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் *
 இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் *
 இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் *
 இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும் **
 இன ஆயர் தலைவனும் யானே என்னும் *
 இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? *
 இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் *
 இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? * (6)

Pasuram 504 · corpus 3294

Pasuram 504

Study resources at Uveda
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் *
 உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் *
 உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் *
 உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் **
 உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் *
 உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ? *
 உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் *
 உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? * (7)

Pasuram 505 · corpus 3295

Pasuram 505

Study resources at Uveda
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் *
 உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் *
 உரைக்கின்ற அமரரும் யானே என்னும் *
 உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் **
 உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் *
 உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
 உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
 உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? * (8)

Pasuram 506 · corpus 3296

Pasuram 506

Study resources at Uveda
கொடிய வினை யாதும் இலனே என்னும் *
 கொடிய வினை ஆவேனும் யானே என்னும் *
 கொடிய வினை செய்வேனும் யானே என்னும் *
 கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் **
 கொடியான் இலங்கை செற்றேனே என்னும் *
 கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ? *
 கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
 கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? * (9)

Pasuram 507 · corpus 3297

Pasuram 507

Study resources at Uveda
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் *
 கோலம் இல் நரகமும் யானே என்னும் *
 கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் *
 கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் **
 கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் *
 கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
 கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
 கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? * (10)

Pasuram 508 · corpus 3298

Pasuram 508

Study resources at Uveda
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் *
 குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை *
 வாய்ந்த வழுதி வள நாடன் * மன்னு
 குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து **
 ஆய்ந்த தமிழ் மாலை * ஆயிரத்துள்
 இவையும் ஓர் பத்தும் வல்லார் * உலகில்
 ஏந்து பெரும் செல்வத்தராய்த் * திருமால்
 அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே * (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.