This page preserves the source-defined decade 5, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் * ஆகிலும் இனி உன்னை விட்டு * ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் * அரவின் அணை அம்மானே **
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் * சிரீவரமங்கல நகர் *
வீற்றிருந்த எந்தாய் * உனக்கு மிகை அல்லேன் அங்கே * (1)
கருளப் புள் கொடி சக்கரப் படை * வான நாட என் கார்முகில் வண்ணா *
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி * அடிமைகொண்டாய் **
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் * சிரீவரமங்கலநகர்க்கு *
அருள்செய்து அங்கு இருந்தாய் * அறியேன் ஒரு கைம்மாறே * (3)
மாறு சேர் படை நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி *
நீறு செய்த எந்தாய் * நிலம் கீண்ட அம்மானே **
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
ஏறி வீற்றிருந்தாய் * உன்னை எங்கு எய்தக் கூவுவனே? * (4)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட * வானவர் கொழுந்தே * உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே * முழு ஏழ் உலகும் உண்டாய் **
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
அந்தம் இல் புகழாய் * அடியேனை அகற்றேலே * (7)
அகற்ற நீ வைத்த மாய வல்லை * ஐம்புலன்களாம் அவை * நன்கு அறிந்தனன் *
அகற்றி என்னையும் நீ * அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் **
பகல் கதிர் மணி மாட நீடு * சிரீவரமங்கை வாணனே * என்றும்
புகற்கு அரிய எந்தாய் * புள்ளின் வாய் பிளந்தானே * (8)