Corpus pasurams 3310–3320

This page preserves the source-defined decade 5, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 520 · corpus 3310

Pasuram 520

Study resources at Uveda
ஆரா அமுதே அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே *
 நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே **
 சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் * செழு நீர்த் திருக்குடந்தை *
 ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்! * கண்டேன் எம்மானே * (1)

Pasuram 521 · corpus 3311

Pasuram 521

Study resources at Uveda
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி * என்னை ஆள்வானே *
 எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் * ஆவாய் எழில் ஏறே **
 செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் * திருக்குடந்தை *
 அம் மா மலர்க்கண் வளர்கின்றானே * என் நான் செய்கேனே * (2)

Pasuram 522 · corpus 3312

Pasuram 522

Study resources at Uveda
என் நான் செய்கேன்? * யாரே களைகண்? * என்னை என் செய்கின்றாய்? *
 உன்னால் அல்லால் யாவராலும் * ஒன்றும் குறை வேண்டேன் **
 கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் * அடியேன் அரு வாழ்நாள் *
 செல் நாள் எந் நாள்? அந் நாள் * உன தாள் பிடித்தே செலக்காணே (3)

Pasuram 523 · corpus 3313

Pasuram 523

Study resources at Uveda
செலக் காண்கிற்பார் காணும் அளவும் * செல்லும் கீர்த்தியாய் *
 உலப்பு இலானே எல்லா உலகும் உடைய * ஒரு மூர்த்தி **
 நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் * உன்னைக் காண்பான் நான்
 அலப்பு ஆய் * ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே * (4)

Pasuram 524 · corpus 3314

Pasuram 524

Study resources at Uveda
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் * பாடி அலற்றுவன் *
 தழு வல்வினையால் பக்கம் நோக்கி * நாணிக் கவிழ்ந்திருப்பன் **
 செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் * செந்தாமரைக் கண்ணா *
 தொழுவனேனை உன தாள் * சேரும் வகையே சூழ்கண்டாய் (5)

Pasuram 525 · corpus 3315

Pasuram 525

Study resources at Uveda
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து * உன் அடிசேரும்
 ஊழ் கண்டிருந்தே * தூராக்குழி தூர்த்து * எனை நாள் அகன்று இருப்பன்? **
 வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் * வானோர் கோமானே *
 யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே அரிஏறே! (6)

Pasuram 526 · corpus 3316

Pasuram 526

Study resources at Uveda
அரிஏறே என் அம் பொன் சுடரே * செங்கண் கரு முகிலே! *
 எரி ஏய் பவளக் குன்றே! * நால் தோள் எந்தாய் உனது அருளே **
 பிரியா அடிமை என்னைக் கொண்டாய் * குடந்தைத் திருமாலே *
 தரியேன் இனி உன் சரணம் தந்து * என் சன்மம் களையாயே (7)

Pasuram 527 · corpus 3317

Pasuram 527

Study resources at Uveda
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் * களைகண் மற்று இலேன் *
 வளை வாய் நேமிப் படையாய் * குடந்தைக் கிடந்த மா மாயா **
 தளரா உடலம் எனது ஆவி * சரிந்து போம்போது *
 இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் * போத இசை நீயே * (8)

Pasuram 528 · corpus 3318

Pasuram 528

Study resources at Uveda
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் * இருத்தும் அம்மானே *
 அசைவு இல் அமரர் தலைவர் தலைவா * ஆதிப் பெரு மூர்த்தி **
 திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் * திருக்குடந்தை *
 அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் * காண வாராயே (9)

Pasuram 529 · corpus 3319

Pasuram 529

Study resources at Uveda
வாரா அருவாய் வரும் என் மாயா! * மாயா மூர்த்தியாய் *
 ஆரா அமுதாய் அடியேன் ஆவி * அகமே தித்திப்பாய் **
 தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் * திருக்குடந்தை *
 ஊராய் * உனக்கு ஆள் பட்டும் * அடியேன் இன்னம் உழல்வேனோ? (10)

Pasuram 530 · corpus 3320

Pasuram 530

Study resources at Uveda
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு * அவளை உயிர் உண்டான் *
 கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட * குருகூர்ச் சடகோபன் **
 குழலின் மலியச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
 மழலை தீர வல்லார் * காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.