Corpus pasurams 3354–3364

This page preserves the source-defined decade 6, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 564 · corpus 3354

Pasuram 564

Study resources at Uveda
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் * முன்பு நான் அது அஞ்சுவன் *
 மன் உடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே **
 உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் * இனி அதுகொண்டு செய்வது என்? *
 என்னுடைய பந்தும் கழலும் * தந்து போகு நம்பீ (1)

Pasuram 565 · corpus 3355

Pasuram 565

Study resources at Uveda
போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும் * செவ்வாய் முறுவலும் *
 ஆகுலங்கள் செய்ய * அழிதற்கே நோற்றோமே யாம்? **
 தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் * செவி ஓசை வைத்து எழ *
 ஆகள் போகவிட்டுக் * குழல் ஊது போயிருந்தே (2)

Pasuram 566 · corpus 3356

Pasuram 566

Study resources at Uveda
போயிருந்து நின் புள்ளுவம் * அறியாதவர்க்கு உரை நம்பீ * நின் செய்ய
 வாய் இருங் கனியும் கண்களும் * விபரீதம் இந் நாள் **
 வேய் இரும் தடம் தோளினார் * இத் திருவருள் பெறுவார் எவர்கொல் *
 மா இரும் கடலைக் கடைந்த * பெருமானாலே? (3)

Pasuram 567 · corpus 3357

Pasuram 567

Study resources at Uveda
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு * அன்று நீ கிடந்தாய் * உன் மாயங்கள்
 மேலை வானவரும் அறியார் * இனி எம் பரமே? **
 வேலின் நேர் தடம் கண்ணினார் * விளையாடு சூழலைச் சூழவே நின்று *
 காலி மேய்க்க வல்லாய்! * எம்மை நீ கழறேலே (4)

Pasuram 568 · corpus 3358

Pasuram 568

Study resources at Uveda
கழறேல் நம்பீ ! * உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் * திண் சக்கர
 நிழறு தொல் படையாய் * உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் **
 மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க * எம்
 குழறு பூவையொடும் * கிளியோடும் குழகேலே (5)

Pasuram 569 · corpus 3359

Pasuram 569

Study resources at Uveda
குழகி எங்கள் குழமணன்கொண்டு * கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை *
 பழகி யாம் இருப்போம் * பரமே இத் திரு அருள்கள்? **
 அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் * தேவிமை ஈதகுவார் பலர் உளர் *
 கழகம் ஏறேல் நம்பீ * உனக்கும் இளைதே கன்மமே (6)

Pasuram 570 · corpus 3360

Pasuram 570

Study resources at Uveda
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது * கடல் ஞாலம் உண்டிட்ட *
 நின்மலா நெடியாய்! * உனக்கேலும் பிழை பிழையே **
 வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி * அது கேட்கில் என் ஐம்மார் *
 தன்ம பாவம் என்னார் * ஒரு நான்று தடி பிணக்கே (7)

Pasuram 571 · corpus 3361

Pasuram 571

Study resources at Uveda
பிணக்கி யாவையும் யாவரும் * பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் *
 கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் * கதிர் ஞான மூர்த்தியினாய்
 இணக்கி எம்மை எம் தோழிமார் ** விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை *
 உணக்கி நீ வளைத்தால் * என் சொல்லார் உகவாதவரே? (8)

Pasuram 572 · corpus 3362

Pasuram 572

Study resources at Uveda
உகவையால் நெஞ்சம் உள் உருகி * உன் தாமரைத் தடம் கண் விழிகளின் *
 அக வலைப் படுப்பான் * அழித்தாய் உன் திருவடியால் **
 தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் * யாம் அடு சிறு சோறும் கண்டு * நின்
 முக ஒளி திகழ * முறுவல் செய்து நின்றிலையே (9)

Pasuram 573 · corpus 3363

Pasuram 573

Study resources at Uveda
நின்று இலங்கு முடியினாய்! * இருபத்தோர் கால் அரசு களைகட்ட *
 வென்றி நீள் மழுவா! * வியன் ஞாலம் முன் படைத்தாய்! **
 இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய * கருமாணிக்கச் சுடர் *
 நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் * ஆய்ச்சியோமே (10)

Pasuram 574 · corpus 3364

Pasuram 574

Study resources at Uveda
ஆய்ச்சி ஆகிய அன்னையால் * அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
 கூத்த அப்பன் தன்னை * குருகூர்ச் சடகோபன் **
 ஏத்திய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும் *
 நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு * இல்லை நல்குரவே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.