Corpus pasurams 3365–3375

This page preserves the source-defined decade 6, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 575 · corpus 3365

Pasuram 575

Study resources at Uveda
நல்குரவும் செல்வும் * நரகும் சுவர்க்கமும் ஆய் *
 வெல்பகையும் நட்பும் * விடமும் அமுதமும் ஆய் **
 பல்வகையும் பரந்த * பெருமான் என்னை ஆள்வானை *
 செல்வம் மல்கு குடித் * திருவிண்ணகர்க் கண்டேனே (1)

Pasuram 576 · corpus 3366

Pasuram 576

Study resources at Uveda
கண்ட இன்பம் துன்பம் * கலக்கங்களும் தேற்றமும் ஆய் *
 தண்டமும் தண்மையும் * தழலும் நிழலும் ஆய் **
 கண்டுகோடற்கு அரிய * பெருமான் என்னை ஆள்வான் ஊர் *
 தெண் திரைப் புனல் சூழ் * திருவிண்ணகர் நல் நகரே (2)

Pasuram 577 · corpus 3367

Pasuram 577

Study resources at Uveda
நகரமும் நாடுகளும் * ஞானமும் மூடமும் ஆய் *
 நிகர் இல் சூழ் சுடர் ஆய் * இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் **
 சிகர மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 புகர் கொள் கீர்த்தி அல்லால் * இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)

Pasuram 578 · corpus 3368

Pasuram 578

Study resources at Uveda
புண்ணியம் பாவம் * புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய் *
 எண்ணம் ஆய் மறப்பு ஆய் * உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய் **
 திண்ண மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 கண்ணன் இன் அருளே * கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)

Pasuram 579 · corpus 3369

Pasuram 579

Study resources at Uveda
கைதவம் செம்மை * கருமை வெளுமையும் ஆய் *
 மெய் பொய் இளமை * முதுமை புதுமை பழமையும் ஆய் **
 செய்த திண் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 பெய்த காவு கண்டீர் * பெரும் தேவு உடை மூவுலகே (5)

Pasuram 580 · corpus 3370

Pasuram 580

Study resources at Uveda
மூவுலகங்களும் ஆய் * அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய் *
 பூவில் வாழ் மகள் ஆய் * தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய் **
 தேவர் மேவித் தொழும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 பாவியேன் மனத்தே * உறைகின்ற பரஞ்சுடரே (6)

Pasuram 581 · corpus 3371

Pasuram 581

Study resources at Uveda
பரம் சுடர் உடம்பு ஆய் * அழுக்குப் பதித்த உடம்பு ஆய் *
 கரந்தும் தோன்றியும் நின்றும் * கைதவங்கள் செய்தும் ** விண்ணோர்
 சிரங்களால் வணங்கும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 வரம் கொள் பாதம் அல்லால் இல்லை * யாவர்க்கும் வன் சரணே (7)

Pasuram 582 · corpus 3372

Pasuram 582

Study resources at Uveda
வன் சரண் சுரர்க்கு ஆய் * அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய் *
 தன் சரண் நிழற்கீழ் * உலகம் வைத்தும் வையாதும் **
 தென் சரண் திசைக்குத் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
 என் சரண் என் கண்ணன் * என்னை ஆளுடை என் அப்பனே (8)

Pasuram 583 · corpus 3373

Pasuram 583

Study resources at Uveda
என் அப்பன் எனக்கு ஆய் * இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய் *
 பொன் அப்பன் மணி அப்பன் * முத்து அப்பன் அன் அப்பனும் ஆய் **
 மின்னப் பொன் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் *
 தன் ஒப்பார் இல் அப்பன் * தந்தனன் தன தாள் நிழலே (9)

Pasuram 584 · corpus 3374

Pasuram 584

Study resources at Uveda
நிழல் வெய்யில் சிறுமை பெருமை * குறுமை நெடுமையும் ஆய் *
 சுழல்வன நிற்பன * மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய் **
 மழலை வாய் வண்டு வாழ் * திருவிண்ணகர் மன்னு பிரான் *
 கழல்கள் அன்றி * மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)

Pasuram 585 · corpus 3375

Pasuram 585

Study resources at Uveda
காண்மின்கள் உலகீர் என்று * கண்முகப்பே நிமிர்ந்த *
 தாள் இணையன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 ஆணை ஆயிரத்துத் * திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் *
 கோணை இன்றி விண்ணோர்க்கு * என்றும் ஆவர் குரவர்களே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.