Corpus pasurams 3376–3386

This page preserves the source-defined decade 6, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 586 · corpus 3376

Pasuram 586

Study resources at Uveda
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் *
 குன்றம் ஒன்று ஏந்தியதும் *
 உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் *
 உட்பட மற்றும் பல **
 அரவில் பள்ளிப் பிரான் தன் * மாய
 வினைகளையே அலற்றி *
 இரவும் நன் பகலும் தவிர்கிலன் *
 என்ன குறை எனக்கே? (1)

Pasuram 587 · corpus 3377

Pasuram 587

Study resources at Uveda
கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் *
 கெண்டை ஒண் கண் *
 வாசப் பூங் குழல் பின்னை தோள்கள் *
 மணந்ததும் மற்றும் பல **
 மாயக் கோலப் பிரான் தன் * செய்கை
 நினைந்து மனம் குழைந்து *
 நேயத்தோடு கழிந்த போது * எனக்கு
 எவ் உலகம் நிகரே? (2)

Pasuram 588 · corpus 3378

Pasuram 588

Study resources at Uveda
நிகர் இல் மல்லரைச் செற்றதும் * நிரை மேய்த்ததும்
 நீள் நெடும் கை *
 சிகர மா களிறு அட்டதும் * இவை
 போல்வனவும் பிறவும் **
 புகர்கொள் சோதிப் பிரான் தன் * செய்கை
 நினைந்து புலம்பி என்றும் *
 நுகர வைகல் வைகப்பெற்றேன் * எனக்கு
 என் இனி நோவதுவே? (3)

Pasuram 589 · corpus 3379

Pasuram 589

Study resources at Uveda
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க * இரங்கிற்றும்
 வஞ்சப் பெண்ணை *
 சாவப் பால் உண்டதும் * ஊர் சகடம்
 இறச் சாடியதும் **
 தேவக் கோலப் பிரான் தன் * செய்கை
 நினைந்து மனம் குழைந்து *
 மேவக் காலங்கள் கூடினேன் * எனக்கு
 என் இனி வேண்டுவதே? (4)

Pasuram 590 · corpus 3380

Pasuram 590

Study resources at Uveda
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் *
 வீங்கு இருள்வாய்
 பூண்டு * அன்று அன்னைப் புலம்ப போய் * அங்கு ஓர்
 ஆய்க்குலம் புக்கதும் **
 காண்டல் இன்றி வளர்ந்து * கஞ்சனைத் துஞ்ச
 வஞ்சம் செய்ததும் *
 ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் * எனக்கு
 என்ன இகல் உளதே? (5)

Pasuram 591 · corpus 3381

Pasuram 591

Study resources at Uveda
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் * இமில்
 ஏறுகள் செற்றதுவும் *
 உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் *
 உட்பட மற்றும் பல **
 அகல் கொள் வையம் அளந்த மாயன் * என்
 அப்பன் தன் மாயங்களே *
 பகல் இராப் பரவப் பெற்றேன் * எனக்கு
 என்ன மனப் பரிப்பே? (6)

Pasuram 592 · corpus 3382

Pasuram 592

Study resources at Uveda
மனப் பரிப்போடு அழுக்கு * மானிட
 சாதியில் தான்பிறந்து *
 தனக்கு வேண்டு உருக்கொண்டு * தான் தன
 சீற்றத்தினை முடிக்கும் **
 புனத் துழாய் முடி மாலை மார்பன் * என்
 அப்பன் தன் மாயங்களே *
 நினைக்கும் நெஞ்சு உடையேன் * எனக்கு
 இனி யார் நிகர் நீள் நிலத்தே? (7)

Pasuram 593 · corpus 3383

Pasuram 593

Study resources at Uveda
நீள் நிலத்தொடு வான் வியப்ப * நிறை பெரும்
 போர்கள் செய்து *
 வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் *
 உட்பட மற்றும் பல **
 மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் * என்
 அப்பன் தன் மாயங்களே *
 காணும் நெஞ்சு உடையேன் * எனக்கு
 இனி என்ன கலக்கம் உண்டே? (8)

Pasuram 594 · corpus 3384

Pasuram 594

Study resources at Uveda
கலக்க ஏழ் கடல் ஏழ் * மலை உலகு ஏழும்
 கழியக் கடாய் *
 உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் *
 உட்பட மற்றும் பல **
 வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் *
 இவை உடை மால்வண்ணனை *
 மலக்கும் நா உடையேற்கு * மாறு உளதோ
 இம் மண்ணின் மிசையே? (9)

Pasuram 595 · corpus 3385

Pasuram 595

Study resources at Uveda
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க * ஓர்
 பாரத மா பெரும் போர்
 பண்ணி * மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட *
 நூற்றிட்டுப் போய் **
 விண்மிசைத் தன தாமமே புக * மேவிய
 சோதி தன் தாள் *
 நண்ணி நான் வணங்கப்பெற்றேன் * எனக்கு
 ஆர் பிறர் நாயகரே? (10)

Pasuram 596 · corpus 3386

Pasuram 596

Study resources at Uveda
நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
 ஆய் * முழு ஏழ் உலகும் * தன்
 வாயகம் புக வைத்து உமிழ்ந்து *
 அவை ஆய் அவை அல்லனும் ஆம் **
 கேசவன் அடி இணைமிசைக் *
 குருகூர்ச் சடகோபன் சொன்ன *
 தூய ஆயிரத்து இப் பத்தால் *
 பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.