Corpus pasurams 3387–3397

This page preserves the source-defined decade 6, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 597 · corpus 3387

Pasuram 597

Study resources at Uveda
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு *
 தொலைவில்லிமங்கலம் தொழும்
 இவளை * நீர் இனி அன்னைமீர் * உமக்கு
 ஆசை இல்லை விடுமினோ **
 தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் *
 தாமரைத் தடம் கண் என்றும் *
 குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க *
 நின்று நின்று குமுறுமே (1)

Pasuram 598 · corpus 3388

Pasuram 598

Study resources at Uveda
குமுறும் ஓசை விழவு ஒலித் *
 தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
 அமுத மென் மொழியாளை * நீர் உமக்கு
 ஆசை இன்றி அகற்றினீர் **
 திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் * மற்று இவள்
 தேவ தேவபிரான் என்றே *
 நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க *
 நெக்கு ஒசிந்து கரையுமே (2)

Pasuram 599 · corpus 3389

Pasuram 599

Study resources at Uveda
கரை கொள் பைம் பொழில் தண் பணைத் *
 தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
 உரை கொள் இன் மொழியாளை * நீர் உமக்கு
 ஆசை இன்றி அகற்றினீர் **
 திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் *
 திசை ஞாலம் தாவி அளந்ததும் *
 நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி *
 நெடும் கண் நீர் மல்க நிற்குமே (3)

Pasuram 600 · corpus 3390

Pasuram 600

Study resources at Uveda
நிற்கும் நால்மறைவாணர் வாழ் *
 தொலைவில்லிமங்கலம் கண்டபின் *
 அற்கம் ஒன்றும் அற உறாள் * மலிந்தாள்
 கண்டீர் இவள் அன்னைமீர் **
 கற்கும் கல்வி எல்லாம் * கருங் கடல்
 வண்ணன் கண்ண பிரான் என்றே *
 ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து * உகந்து
 உள் மகிழ்ந்து குழையுமே (4)

Pasuram 601 · corpus 3391

Pasuram 601

Study resources at Uveda
குழையும் வாள் முகத்து * ஏழையைத்
 தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
 இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
 பிரான் * இருந்தமை காட்டினீர் **
 மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு *
 அன்று தொட்டும் மையாந்து * இவள்
 நுழையும் சிந்தையள் அன்னைமீர் * தொழும்
 அத் திசை உற்று நோக்கியே (5)

Pasuram 602 · corpus 3392

Pasuram 602

Study resources at Uveda
நோக்கும் பக்கம் எல்லாம் * கரும்பொடு
 செந்நெல் ஓங்கு செந்தாமரை *
 வாய்க்கும் தண் பொருநல் * வடகரை
 வண் தொலைவில்லிமங்கலம் **
 நோக்குமேல் அத் திசை அல்லால் * மறு
 நோக்கு இலள் வைகல் நாள்தொறும் *
 வாய்க்கொள் வாசகமும் * மணிவண்ணன்
 நாமமே இவள் அன்னைமீர்! (6)

Pasuram 603 · corpus 3393

Pasuram 603

Study resources at Uveda
அன்னைமீர் அணி மா மயில் * சிறுமான்
 இவள் நம்மைக் கைவலிந்து *
 என்ன வார்த்தையும் கேட்குறாள் *
 தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் **
 முன்னம் நோற்ற விதிகொலோ? * முகில்
 வண்ணன் மாயம் கொலோ? * அவன்
 சின்னமும் திருநாமமும் * இவள்
 வாயனகள் திருந்தவே (7)

Pasuram 604 · corpus 3394

Pasuram 604

Study resources at Uveda
திருந்து வேதமும் வேள்வியும் *
 திரு மா மகளிரும் தாம் * மலிந்து
 இருந்து வாழ் பொருநல் * வடகரை
 வண் தொலைவில்லிமங்கலம் **
 கருந் தடம் கண்ணி கைதொழுத * அந் நாள்
 தொடங்கி இந் நாள்தொறும் *
 இருந்து இருந்து அரவிந்தலோசன! *
 என்று என்றே நைந்து இரங்குமே (8)

Pasuram 605 · corpus 3395

Pasuram 605

Study resources at Uveda
இரங்கி நாள்தொறும் * வாய்வெரீஇ இவள்
 கண்ண நீர்கள் அலமர *
 மரங்களும் இரங்கும் வகை *
 மணிவண்ணவோ! என்று கூவுமால் **
 துரங்கம் வாய் பிளந்தான் உறை *
 தொலைவில்லிமங்கலம் என்று * தன்
 கரங்கள் கூப்பித் தொழும் * அவ் ஊர்த்
 திருநாமம் கற்றதன் பின்னையே (9)

Pasuram 606 · corpus 3396

Pasuram 606

Study resources at Uveda
பின்னைகொல் நில மா மகள்கொல் *
 திருமகள்கொல்? பிறந்திட்டாள் *
 என்ன மாயம்கொலோ? * இவள் நெடுமால்
 என்றே நின்று கூவுமால் **
 முன்னி வந்து அவன் நின்று இருந்து
 உறையும் * தொலைவில்லிமங்கலம்
 சென்னியால் வணங்கும் * அவ் ஊர்த்
 திருநாமம் * கேட்பது சிந்தையே (10)

Pasuram 607 · corpus 3397

Pasuram 607

Study resources at Uveda
சிந்தையாலும் சொல்லாலும்
 செய்கையினாலும் * தேவ பிரானையே *
 தந்தை தாய் என்று அடைந்த *
 வண் குருகூர் சடகோபன் சொல் **
 முந்தை ஆயிரத்துள் இவை * தொலை
 வில்லிமங்கலத்தைச் சொன்ன *
 செந்தமிழ்ப் பத்தும் வல்லார் *
 அடிமைசெய்வார் திருமாலுக்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.