Pasuram 608 · corpus 3398
Pasuram 608
மாலுக்கு * வையம் அளந்த மணாளற்கு *
நீலக் கரு நிற * மேக நியாயற்கு **
கோலச் செந்தாமரைக் * கண்ணற்கு * என் கொங்கு அலர்
ஏலக் குழலி * இழந்தது சங்கே (1)
Nammazhvar · Pasurams 608–618
Corpus pasurams 3398–3408
This page preserves the source-defined decade 6, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 608 · corpus 3398
மாலுக்கு * வையம் அளந்த மணாளற்கு *
நீலக் கரு நிற * மேக நியாயற்கு **
கோலச் செந்தாமரைக் * கண்ணற்கு * என் கொங்கு அலர்
ஏலக் குழலி * இழந்தது சங்கே (1)
Pasuram 609 · corpus 3399
சங்கு வில் வாள் தண்டு * சக்கரக் கையற்கு *
செங்கனிவாய்ச் * செய்ய தாமரைக் கண்ணற்கு **
கொங்கு அலர் தண் அம் துழாய் * முடியானுக்கு * என்
மங்கை இழந்தது * மாமை நிறமே (2)
Pasuram 610 · corpus 3400
நிறம் கரியானுக்கு * நீடு உலகு உண்ட *
திறம் கிளர் வாய்ச் * சிறுக் கள்வன் அவற்கு **
கறங்கிய சக்கரக் * கையவனுக்கு * என்
பிறங்கு இரும் கூந்தல் * இழந்தது பீடே (3)
Pasuram 611 · corpus 3401
பீடு உடை நான்முகனைப் * படைத்தானுக்கு *
மாடு உடை வையம் அளந்த * மணாளற்கு **
நாடு உடை மன்னர்க்குத் * தூது செல் நம்பிக்கு * என்
பாடு உடை அல்குல் * இழந்தது பண்பே (4)
Pasuram 612 · corpus 3402
பண்பு உடை வேதம் * பயந்த பரனுக்கு *
மண் புரை வையம் இடந்த * வராகற்கு **
தெண் புனல் பள்ளி * எம் தேவ பிரானுக்கு * என்
கண்புனை கோதை * இழந்தது கற்பே (5)
Pasuram 613 · corpus 3403
கற்பகக் கா அன * நல் பல தோளற்கு *
பொன் சுடர்க் குன்று அன்ன * பூந் தண் முடியற்கு **
நல் பல தாமரை * நாள் மலர்க் கையற்கு * என்
வில் புருவக்கொடி * தோற்றது மெய்யே (6)
Pasuram 614 · corpus 3404
மெய் அமர் பல் கலன் * நன்கு அணிந்தானுக்கு *
பை அரவின் அணைப் * பள்ளியினானுக்கு **
கையொடு கால் செய்ய * கண்ண பிரானுக்கு * என்
தையல் இழந்தது * தன்னுடைச் சாயே (7)
Pasuram 615 · corpus 3405
சாயக் குருந்தம் ஒசித்த * தமியற்கு *
மாயச் சகடம் உதைத்த * மணாளற்கு **
பேயைப் பிணம்படப் * பால் உண் பிரானுக்கு * என்
வாசக் குழலி * இழந்தது மாண்பே (8)
Pasuram 616 · corpus 3406
மாண்பு அமை கோலத்து * எம் மாயக் குறளற்கு *
சேண் சுடர்க் குன்று அன்ன * செஞ்சுடர் மூர்த்திக்கு **
காண் பெரும் தோற்றத்து * எம் காகுத்த நம்பிக்கு * என்
பூண் புனை மென்முலை * தோற்றது பொற்பே (9)
Pasuram 617 · corpus 3407
பொற்பு அமை நீள் முடிப் * பூந் தண் துழாயற்கு *
மல் பொரு தோள் உடை * மாயப் பிரானுக்கு **
நிற்பன பல் உருவாய் * நிற்கும் மாயற்கு * என்
கற்பு உடையாட்டி * இழந்தது கட்டே (10)
Pasuram 618 · corpus 3408
கட்டு எழில் சோலை * நல் வேங்கடவாணனை *
கட்டு எழில் தென் குருகூர்ச் * சடகோபன் சொல் **
கட்டு எழில் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
கட்டு எழில் வானவர் * போகம் உண்பாரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.