Corpus pasurams 3409–3419

This page preserves the source-defined decade 6, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 619 · corpus 3409

Pasuram 619

Study resources at Uveda
உண்ணும் சோறு பருகும் நீர் * தின்னும் வெற்றிலையும் எல்லாம்
 கண்ணன் * எம் பெருமான் என்று என்றே * கண்கள் நீர் மல்கி **
 மண்ணினுள் அவன் சீர் * வளம் மிக்கவன் ஊர் வினவி *
 திண்ணம் என் இளமான் புகும் ஊர் * திருக்கோளூரே (1)

Pasuram 620 · corpus 3410

Pasuram 620

Study resources at Uveda
ஊரும் நாடும் உலகமும் * தன்னைப்போல் அவனுடைய *
 பேரும் தார்களுமே பிதற்ற * கற்பு வான் இடறி **
 சேரும் நல் வளம் சேர் * பழனத் திருக்கோளூர்க்கே *
 போரும் கொல் உரையீர் * கொடியேன் கொடி பூவைகளே? (2)

Pasuram 621 · corpus 3411

Pasuram 621

Study resources at Uveda
பூவை பைங்கிளிகள் * பந்து தூதை பூம் புட்டில்கள் *
 யாவையும் திருமால் * திருநாமங்களே கூவி எழும் ** என்
 பாவை போய் இனித் * தண் பழனத் திருக்கோளூர்க்கே *
 கோவை வாய் துடிப்ப * மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3)

Pasuram 622 · corpus 3412

Pasuram 622

Study resources at Uveda
கொல்லை என்பர்கொலோ * குணம் மிக்கனள் என்பர்கொலோ *
 சில்லை வாய்ப் பெண்டுகள் * அயல் சேரி உள்ளாரும்? எல்லே **
 செல்வம் மல்கி அவன்கிடந்த * திருக்கோளூர்க்கே *
 மேல் இடை நுடங்க * இளமான் செல்ல மேவினளே (4)

Pasuram 623 · corpus 3413

Pasuram 623

Study resources at Uveda
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் * என் சிறுத்
 தேவி போய் * இனித் தன் திருமால் * திருக்கோளூரில் **
 பூ இயல் பொழிலும் * தடமும் அவன் கோயிலும் கண்டு *
 ஆவி உள் குளிர * எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5)

Pasuram 624 · corpus 3414

Pasuram 624

Study resources at Uveda
இன்று எனக்கு உதவாது அகன்ற * இளமான் இனிப் போய் *
 தென் திசைத் திலதம் அனைய * திருக்கோளூர்க்கே
 சென்று ** தன் திருமால் திருக்கண்ணும் * செவ்வாயும் கண்டு *
 நின்று நின்று நையும் * நெடும் கண்கள் பனி மல்கவே (6)

Pasuram 625 · corpus 3415

Pasuram 625

Study resources at Uveda
மல்கு நீர்க் கண்ணொடு * மையல் உற்ற மனத்தினளாய் *
 அல்லும் நன் பகலும் * நெடுமால் என்று அழைத்து இனிப் போய் **
 செல்வம் மல்கி அவன் கிடந்த * திருக்கோளுர்க்கே *
 ஒல்கி ஒல்கி நடந்து * எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7)

Pasuram 626 · corpus 3416

Pasuram 626

Study resources at Uveda
ஒசிந்த நுண் இடைமேல் * கையை வைத்து நொந்து நொந்து
 கசிந்த நெஞ்சினளாய்க் * கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்? **
 ஒசிந்த ஒண் மலராள் * கொழுநன் திருக்கோளூர்க்கே *
 கசிந்த நெஞ்சினளாய் * எம்மை நீத்த எம் காரிகையே? (8)

Pasuram 627 · corpus 3417

Pasuram 627

Study resources at Uveda
காரியம் நல்லனகள் * அவை காணில் என் கண்ணனுக்கு என்று *
 ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் * கிடக்க இனிப் போய் **
 சேரி பல் பழி தூஉய் இரைப்பத் * திருக்கோளூர்க்கே *
 நேரிழை நடந்தாள் * எம்மை ஒன்றும் நினைந்திலளே (9)

Pasuram 628 · corpus 3418

Pasuram 628

Study resources at Uveda
நினைக்கிலேன் தெய்வங்காள் * நெடும் கண் இளமான் இனிப் போய் *
 அனைத்து உலகும் உடைய * அரவிந்தலோசனனை **
 தினைத்தனையும் விடாள் * அவன் சேர் திருக்கோளூர்க்கே *
 மனைக்கு வான் பழியும் நினையாள் * செல்ல வைத்தனளே (10)

Pasuram 629 · corpus 3419

Pasuram 629

Study resources at Uveda
வைத்த மா நிதியாம் * மதுசூதனையே அலற்றி *
 கொத்து அலர் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன *
 பத்து நூற்றுள் இப் பத்து ** அவன் சேர் திருக்கோளூர்க்கே *
 சித்தம் வைத்து உரைப்பார் * திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.