Corpus pasurams 3552–3562

This page preserves the source-defined decade 7, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 762 · corpus 3552

Pasuram 762

Study resources at Uveda
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் * தானும்
 இவ் ஏழ் உலகை *
 இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து *
 ஆள்கின்ற எங்கள் பிரான் **
 அன்புற்று அமர்ந்து உறைகின்ற * அணி பொழில்
 சூழ் திருவாறன்விளை *
 அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து * கைதொழும்
 நாள்களும் ஆகும்கொலோ? (1)

Pasuram 763 · corpus 3553

Pasuram 763

Study resources at Uveda
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? * அகல் இடம்
 முற்றவும் ஈர் அடியே *
 ஆகும்பரிசு நிமிர்ந்த * திருக்குறள் அப்பன்
 அமர்ந்து உறையும் **
 மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு *
 மதிள் திருவாறன்விளை *
 மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து *
 கைதொழக் கூடும்கொலோ? (2)

Pasuram 764 · corpus 3554

Pasuram 764

Study resources at Uveda
கூடும் கொல் வைகலும்? * கோவிந்தனை
 மதுசூதனைக் கோளரியை *
 ஆடும் பறவைமிசைக் கண்டு * கைதொழுது
 அன்றி அவன் உறையும் **
 பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி * ஐந்து
 ஆறு அங்கம் பன்னினர் வாழ் *
 நீடு பொழில் திருவாறன்விளை தொழ *
 வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)

Pasuram 765 · corpus 3555

Pasuram 765

Study resources at Uveda
வாய்க்கும்கொல் நிச்சலும் * எப்பொழுதும் மனத்து
 ஈங்கு நினைக்கப்பெற *
 வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் *
 வயல் சூழ் திருவாறன்விளை **
 வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன் *
 வடமதுரைப் பிறந்த *
 வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் *
 மலர் அடிப்போதுகளே? (4)

Pasuram 766 · corpus 3556

Pasuram 766

Study resources at Uveda
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் *
 இருத்தி வணங்க
 பலர் அடியார் முன்பு அருளிய * பாம்பு அணை அப்பன்
 அமர்ந்து உறையும் **
 மலரின் மணி நெடு மாடங்கள் நீடு *
 மதிள் திருவாறன்விளை *
 உலகம் மலி புகழ் பாட * நம்மேல் வினை
 ஒன்றும் நில்லா கெடுமே (5)

Pasuram 767 · corpus 3557

Pasuram 767

Study resources at Uveda
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் * தீவினை உள்ளித்
 தொழுமின் தொண்டீர்! *
 அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை *
 அணி நெடும் தோள் புணர்ந்தான் **
 என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப *
 உள்ளே இருக்கின்ற பிரான் *
 நின்ற அணி திருவாறன்விளை என்னும் *
 நீள் நகரம் அதுவே (6)

Pasuram 768 · corpus 3558

Pasuram 768

Study resources at Uveda
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் *
 சூழ் திருவாறன்விளை *
 நீள் நகரத்து உறைகின்ற பிரான் * நெடுமால்
 கண்ணன் விண்ணவர் கோன் **
 வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய *
 வெம் போர்கள் செய்து *
 வாணனை ஆயிரம் தோள் துணித்தான் * சரண்
 அன்றி மற்று ஒன்று இலமே (7)

Pasuram 769 · corpus 3559

Pasuram 769

Study resources at Uveda
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று *
 அகல் இரும் பொய்கையின்வாய் *
 நின்று தன் நீள் கழல் ஏத்திய * ஆனையின்
 நெஞ்சு இடர் தீர்த்த பிரான் **
 சென்று அங்கு இனிது உறைகின்ற * செழும் பொழில்
 சூழ் திருவாறன்விளை *
 ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? * தீவினை
 உள்ளத்தின் சார்வு அல்லவே (8)

Pasuram 770 · corpus 3560

Pasuram 770

Study resources at Uveda
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகித் *
 தெளி விசும்பு ஏறலுற்றால் *
 நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் * அமைந்த
 தொழிலினுள்ளும் நவின்று **
 யாவரும் வந்து வணங்கும் பொழில் *
 திருவாறன்விளை அதனை *
 மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்? *
 என்னும் என் சிந்தனையே (9)

Pasuram 771 · corpus 3561

Pasuram 771

Study resources at Uveda
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை *
 தேவ பிரான் அறியும் *
 சிந்தையினால் செய்வ தான் அறியாதன *
 மாயங்கள் ஒன்றும் இல்லை **
 சிந்தையினால் சொல்லினால் செய்கையால் * நிலத்தேவர்
 குழு வணங்கும் *
 சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை *
 தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)

Pasuram 772 · corpus 3562

Pasuram 772

Study resources at Uveda
தீர்த்தனுக்கு அற்றபின் * மற்று ஓர் சரண் *
 இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
 தீர்த்த மனத்தனன் ஆகிச் * செழுங்
 குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 தீர்த்தங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும்
 வல்லார்களை * தேவர் வைகல்
 தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
 உரைப்பர் * தம் தேவியர்க்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.