Corpus pasurams 3541–3551

This page preserves the source-defined decade 7, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 751 · corpus 3541

Pasuram 751

Study resources at Uveda
என்றைக்கும் என்னை * உய்யக்கொண்டு போகிய *
 அன்றைக்கு அன்று என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை **
 இன் தமிழ் பாடிய ஈசனை * ஆதியாய்
 நின்ற என் சோதியை * என் சொல்லி நிற்பனோ? (1)

Pasuram 752 · corpus 3542

Pasuram 752

Study resources at Uveda
என் சொல்லி நிற்பன் * என் இன் உயிர் இன்று ஒன்றாய் *
 என் சொல்லால் யான் சொன்ன * இன் கவி என்பித்து **
 தன் சொல்லால் தான் தன்னைக் * கீர்த்தித்த மாயன் * என்
 முன் சொல்லும் * மூவுருவாம் முதல்வனே? (2)

Pasuram 753 · corpus 3543

Pasuram 753

Study resources at Uveda
ஆ முதல்வன் இவன் என்று * தன் தேற்றி * என்
 நா முதல் வந்து புகுந்து * நல் இன் கவி **
 தூ முதல் பத்தர்க்குத் * தான் தன்னைச் சொன்ன * என்
 வாய் முதல் அப்பனை * என்று மறப்பனோ? (3)

Pasuram 754 · corpus 3544

Pasuram 754

Study resources at Uveda
அப்பனை என்று மறப்பன் * என் ஆகியே *
 தப்புதல் இன்றித் * தனைக் கவி தான் சொல்லி **
 ஒப்பிலாத் தீவினையேனை * உய்யக்கொண்டு *
 செப்பமே செய்து * திரிகின்ற சீர்கண்டே? (4)

Pasuram 755 · corpus 3545

Pasuram 755

Study resources at Uveda
சீர் கண்டுகொண்டு * திருந்து நல் இன்கவி *
 நேர்பட யான் சொல்லும் * நீர்மை இலாமையில் **
 ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
 பார் பரவு இன் கவி * பாடும் பரமரே (5)

Pasuram 756 · corpus 3546

Pasuram 756

Study resources at Uveda
இன் கவி பாடும் * பரம கவிகளால் *
 தன் கவி தான் தன்னைப் * பாடுவியாது இன்று **
 நன்கு வந்து என்னுடன் ஆக்கி * என்னால் தன்னை *
 வன் கவி பாடும் * என் வைகுந்த நாதனே (6)

Pasuram 757 · corpus 3547

Pasuram 757

Study resources at Uveda
வைகுந்த நாதன் * என வல்வினை மாய்ந்து அற *
 செய் குந்தன் தன்னை * என் ஆக்கி என்னால் தன்னை **
 வைகுந்தன் ஆகப் புகழ * வண் தீம் கவி *
 செய் குந்தன் தன்னை * எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)

Pasuram 758 · corpus 3548

Pasuram 758

Study resources at Uveda
ஆர்வனோ ஆழி அங்கை * எம் பிரான் புகழ் *
 பார் விண் நீர் முற்றும் * கலந்து பருகிலும் **
 ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
 சீர்பெற இன் கவி * சொன்ன திறத்துக்கே? (8)

Pasuram 759 · corpus 3549

Pasuram 759

Study resources at Uveda
திறத்துக்கே துப்புரவு ஆம் * திருமாலின் சீர் *
 இறப்பு எதிர் காலம் * பருகிலும் ஆர்வனோ **
 மறப்பு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
 உறப் பல இன் கவி * சொன்ன உதவிக்கே? (9)

Pasuram 760 · corpus 3550

Pasuram 760

Study resources at Uveda
உதவிக் கைம்மாறு * என் உயிர் என்ன உற்று எண்ணில் *
 அதுவும் மற்று ஆங்கவன் * தன்னது என்னால் தன்னை **
 பதவிய இன் கவி * பாடிய அப்பனுக்கு *
 எதுவும் ஒன்றும் இல்லை * செய்வது இங்கும் அங்கே (10)

Pasuram 761 · corpus 3551

Pasuram 761

Study resources at Uveda
இங்கும் அங்கும் * திருமால் அன்றி இன்மை கண்டு *
 அங்ஙனே வண் குருகூர்ச் * சடகோபன் **
 இங்ஙனே சொன்ன * ஓர் ஆயிரத்து இப் பத்தும் *
 எங்ஙனே சொல்லினும் * இன்பம் பயக்குமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.