Corpus pasurams 3563–3573

This page preserves the source-defined decade 8, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 773 · corpus 3563

Pasuram 773

Study resources at Uveda
தேவிமார் ஆவார் திருமகள் பூமி *
 ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் *
 மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி *
 வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் **
 பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
 கண்ணது ஓர் * பவள வாய் மணியே *
 ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
 அப்பனே * காணுமாறு அருளாய் (1)

Pasuram 774 · corpus 3564

Pasuram 774

Study resources at Uveda
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் *
கண்ண நீர் அலமர * வினையேன்
 பேணுமாறு எல்லாம் பேணி *
 நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ **
 காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா *
 தொண்டனேன் கற்பகக் கனியே *
 பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் *
 பெரு நிலம் எடுத்த பேராளா (2)

Pasuram 775 · corpus 3565

Pasuram 775

Study resources at Uveda
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் *
 இன் உயிர்ச் சிறுவனே * அசோதைக்கு
 அடுத்த பேரின்பக் குல இளம் களிறே *
 அடியனேன் பெரிய அம்மானே **
 கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் *
 கைஉகிர் ஆண்ட எம் கடலே *
 அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் *
 எங்ஙனம் தேறுவர் உமரே? (3)

Pasuram 776 · corpus 3566

Pasuram 776

Study resources at Uveda
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
 ஆகி * உன் தனக்கு அன்பர் ஆனார் *
 அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை *
 அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
 அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் *
 அடு படை அவித்த அம்மானே *
 அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே *
 என்னுடை ஆர் உயிரேயோ (4)

Pasuram 777 · corpus 3567

Pasuram 777

Study resources at Uveda
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் *
 படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த *
 பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து * அங்கு
 உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த **
 சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
 போலத் * தேவர்க்கும் தேவாவோ *
 ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்! *
 உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)

Pasuram 778 · corpus 3568

Pasuram 778

Study resources at Uveda
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே? *
 ஏழ் உலகங்களும் நீயே *
 அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே *
 அவற்று அவை கருமமும் நீயே **
 பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் *
 அவையுமோ நீ இன்னே ஆனால் *
 மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே *
 வான் புலன் இறந்ததும் நீயே (6)

Pasuram 779 · corpus 3569

Pasuram 779

Study resources at Uveda
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே *
 நிகழ்வதோ நீ இன்னே ஆனால் *
 சிறந்த நின் தன்மை அது இது உது என்று *
 அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
 கறந்த பால் நெய்யே! நெய்யின் இன் சுவையே! *
 கடலினுள் அமுதமே * அமுதில்
 பிறந்த இன் சுவையே! சுவையது பயனே! *
 பின்னை தோள் மணந்த பேர் ஆயா! (7)

Pasuram 780 · corpus 3570

Pasuram 780

Study resources at Uveda
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் *
 வல்வினையேனை ஈர்கின்ற *
 குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
 கூற்றமே * கொடிய புள் உயர்த்தாய் **
 பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
 பள்ளியாய் * பாற்கடல் சேர்ப்பா *
 வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் *
 செய்கையும் யானும் நீ தானே (8)

Pasuram 781 · corpus 3571

Pasuram 781

Study resources at Uveda
யானும் நீ தானே ஆவதோ மெய்யே *
 அரு நரகு அவையும் நீ ஆனால் *
 வான் உயர் இன்பம் எய்தில் என்? * மற்றை
 நரகமே எய்தில் என்? * எனிலும் **
 யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
 அஞ்சுவன் * நரகம் நான் அடைதல் *
 வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்! *
 அருளு நின் தாள்களை எனக்கே (9)

Pasuram 782 · corpus 3572

Pasuram 782

Study resources at Uveda
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
 தந்த * பேர் உதவிக் கைம்மாறா *
 தோள்களை ஆரத் தழுவி என் உயிரை *
 அற விலை செய்தனன் சோதீ
 தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய் **
 துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் *
 தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் *
 தமியனேன் பெரிய அப்பனே (10)

Pasuram 783 · corpus 3573

Pasuram 783

Study resources at Uveda
பெரிய அப்பனை பிரமன் அப்பனை *
 உருத்திரன் அப்பனை * முனிவர்க்கு
 உரிய அப்பனை அமரர் அப்பனை *
 உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை **
 பெரிய வண் குருகூர் வண் சடகோபன் *
 பேணின ஆயிரத்துள்ளும் *
 உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் *
 உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.