This page preserves the source-defined decade 7, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நானக் கருங் குழல் தோழிமீர்காள் *
அன்னையர்காள் அயல் சேரியீர்காள் *
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன் *
என் வசம் அன்று இது இராப்பகல் போய் **
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன் *
செங்கனி வாயின் திறத்ததுவே (2)
இழந்த எம் மாமைத்திறத்துப் போன *
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் *
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ? *
ஓதக் கடல் ஒலி போல ** எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் *
அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4)
காலம்பெற என்னைக் காட்டுமின்கள் *
காதல் கடலின் மிகப் பெரிதால் *
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் *
நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் **
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த *
நான்மறையாளரும் வேள்வி ஓவா *
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் *
கூடு புனல் திருப்பேரையிற்கே (6)
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை *
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த *
பேரையிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் *
பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் **
ஆரை இனி இங்கு உடையம் தோழீ? *
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை *
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது? *
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே (7)
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் *
கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு * அலர் தூற்றிற்று அது முதலாக் *
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ **
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் *
நீள் விசும்பும் கழியப் பெரிதால் *
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த *
தென் திருப்பேரையில் சேர்வன் சென்றே (8)
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் *
அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா *
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு? *
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை **
கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட *
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த *
ஏர் வள ஒண் கழனிப் பழனத் *
தென் திருப்பேரையில் மாநகரே (9)
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் *
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் *
சிகர மணி நெடு மாடம் நீடு *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த **
மகர நெடுங்குழைக் காதன் மாயன் *
நூற்றுவரை அன்று மங்க நூற்ற *
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் * என்
நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10)