Corpus pasurams 3486–3496

This page preserves the source-defined decade 7, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 696 · corpus 3486

Pasuram 696

Study resources at Uveda
ஆழி எழச் * சங்கும் வில்லும் எழ * திசை
 வாழி எழத் * தண்டும் வாளும் எழ ** அண்டம்
 மோழை எழ * முடி பாதம் எழ * அப்பன்
 ஊழி எழ * உலகம் கொண்டவாறே (1)

Pasuram 697 · corpus 3487

Pasuram 697

Study resources at Uveda
ஆறு மலைக்கு * எதிர்ந்து ஓடும் ஒலி * அரவு
 ஊறு சுலாய் * மலை தேய்க்கும் ஒலி ** கடல்
 மாறு சுழன்று * அழைக்கின்ற ஒலி * அப்பன்
 சாறுபட * அமுதம் கொண்ட நான்றே (2)

Pasuram 698 · corpus 3488

Pasuram 698

Study resources at Uveda
நான்றில * ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
 நான்றில ஏழ் * மலை தானத்தவே ** பின்னும்
 நான்றில ஏழ் * கடல் தானத்தவே * அப்பன்
 ஊன்றி இடந்து * எயிற்றில் கொண்ட நாளே (3)

Pasuram 699 · corpus 3489

Pasuram 699

Study resources at Uveda
நாளும் எழ * நிலம் நீரும் எழ * விண்ணும்
 கோளும் எழ * எரி காலும் எழ ** மலை
 தாளும் எழச் * சுடர் தானும் எழ * அப்பன்
 ஊளி எழ * உலகம் உண்ட ஊணே (4)

Pasuram 700 · corpus 3490

Pasuram 700

Study resources at Uveda
ஊணுடை மல்லர் * ததர்ந்த ஒலி * மன்னர்
 ஆண் உடைச் சேனை * நடுங்கும் ஒலி ** விண்ணுள்
 ஏண் உடைத் தேவர் * வெளிப்பட்ட ஒலி * அப்பன்
 காணுடைப் பாரதம் * கை அறை போழ்தே (5)

Pasuram 701 · corpus 3491

Pasuram 701

Study resources at Uveda
போழ்து மெலிந்த * புன் செக்கரில் * வான் திசை
 சூழும் எழுந்து * உதிரப் புனலா ** மலை
 கீழ்து பிளந்த * சிங்கம் ஒத்ததால் * அப்பன்
 ஆழ் துயர் செய்து * அசுரரைக் கொல்லுமாறே (6)

Pasuram 702 · corpus 3492

Pasuram 702

Study resources at Uveda
மாறு நிரைத்து * இரைக்கும் சரங்கள் * இன
 நூறு பிணம் * மலைபோல் புரள ** கடல்
 ஆறு மடுத்து * உதிரப் புனலா * அப்பன்
 நீறு பட * இலங்கை செற்ற நேரே (7)

Pasuram 703 · corpus 3493

Pasuram 703

Study resources at Uveda
நேர்சரிந்தான் * கொடிக் கோழி கொண்டான் * பின்னும்
 நேர்சரிந்தான் * எரியும் அனலோன் ** பின்னும்
 நேர்சரிந்தான் * முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
 நேர்சரி வாணன் * திண்தோள் கொண்ட அன்றே (8)

Pasuram 704 · corpus 3494

Pasuram 704

Study resources at Uveda
அன்று மண் நீர் எரி கால் * விண் மலை முதல் *
 அன்று சுடர் * இரண்டு பிறவும் ** பின்னும்
 அன்று மழை * உயிர் தேவும் மற்றும் * அப்பன்
 அன்று முதல் * உலகம் செய்ததுமே (9)

Pasuram 705 · corpus 3495

Pasuram 705

Study resources at Uveda
மேய் நிரை கீழ் புக * மா புரள * சுனை
 வாய் நிறை நீர் * பிளிறிச் சொரிய ** இன
 ஆ நிரைபாடி * அங்கே ஒடுங்க * அப்பன்
 தீ மழை காத்துக் * குன்றம் எடுத்தானே (10)

Pasuram 706 · corpus 3496

Pasuram 706

Study resources at Uveda
குன்றம் எடுத்த பிரான் * அடியாரொடும் *
 ஒன்றி நின்ற * சடகோபன் உரைசெயல் **
 நன்றி புனைந்த * ஓர் ஆயிரத்துள் இவை *
 வென்றி தரும் பத்தும் * மேவிக் கற்பார்க்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.