Pasuram 707 · corpus 3497
Pasuram 707
கற்பார் இராம பிரானை அல்லால் * மற்றும் கற்பரோ? *
புல் பா முதலா * புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே **
நல் பால் அயோத்தியில் வாழும் * சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் * நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)
Nammazhvar · Pasurams 707–717
Corpus pasurams 3497–3507
This page preserves the source-defined decade 7, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 707 · corpus 3497
கற்பார் இராம பிரானை அல்லால் * மற்றும் கற்பரோ? *
புல் பா முதலா * புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே **
நல் பால் அயோத்தியில் வாழும் * சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் * நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)
Pasuram 708 · corpus 3498
நாட்டில் பிறந்தவர் * நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ *
நாட்டில் பிறந்து படாதன பட்டு * மனிசர்க்கா **
நாட்டை நலியும் அரக்கரை * நாடித் தடிந்திட்டு *
நாட்டை அளித்து உய்யச் செய்து * நடந்தமை கேட்டுமே? (2)
Pasuram 709 · corpus 3499
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் * மற்றும் கேட்பரோ *
கேட்பார் செவி சுடு * கீழ்மை வசைவுகளே வையும் **
சேண்பால் பழம் பகைவன் * சிசுபாலன் * திருவடி
தாள் பால் அடைந்த * தன்மை அறிவாரை அறிந்துமே? (3)
Pasuram 710 · corpus 3500
தன்மை அறிபவர் * தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ *
பன்மைப் படர் பொருள் * ஆதும் இல் பாழ் நெடும் காலத்து **
நன்மைப் புனல் பண்ணி * நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே *
தொன்மை மயக்கிய தோற்றிய * சூழல்கள் சிந்தித்தே? (4)
Pasuram 711 · corpus 3501
சூழல்கள் சிந்திக்கில் * மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ *
ஆழப் பெரும் புனல் * தன்னுள் அழுந்திய ஞாலத்தை **
தாழப் படாமல் * தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட *
கேழல் திரு உரு ஆயிற்றுக் * கேட்டும் உணர்ந்துமே? (5)
Pasuram 712 · corpus 3502
கேட்டும் உணர்ந்தவர் * கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ *
வாட்டம் இலா வண் கை * மாவலி வாதிக்க வாதிப்புண்டு **
ஈட்டம் கொள் தேவர்கள் * சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய *
கோட்டு அங்கை வாமனன் ஆய்ச் * செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)
Pasuram 713 · corpus 3503
கண்டும் தெளிந்தும் கற்றார் * கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ *
வண்டு உண் மலர்த் தொங்கல் * மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் **
இண்டைச் சடைமுடி * ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல *
கொண்டு அங்குத் தன்னொடும் கொண்டு * உடன் சென்றது உணர்ந்துமே? (7)
Pasuram 714 · corpus 3504
செல்ல உணர்ந்தவர் * செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ *
எல்லை இலாத பெரும் தவத்தால் * பல செய் மிறை **
அல்லல் அமரரைச் செய்யும் * இரணியன் ஆகத்தை *
மல்லல் அரி உரு ஆய்ச் * செய்த மாயம் அறிந்துமே? (8)
Pasuram 715 · corpus 3505
மாயம் அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் **
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று * சேனையை
நாசம் செய்திட்டு * நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)
Pasuram 716 · corpus 3506
வார்த்தை அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு * இறப்பு இவை
பேர்த்து ** பெரும் துன்பம் வேர் அற நீக்கித் * தன் தாளின் கீழ்ச்
சேர்த்து * அவன் செய்யும் * சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)
Pasuram 717 · corpus 3507
தெளிவுற்று வீவு இன்றி * நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் *
தெளிவுற்ற கண்ணனைத் * தென் குருகூர்ச் சடகோபன் சொல் **
தெளிவுற்ற ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவர் *
தெளிவுற்ற சிந்தையர் * பா மரு மூவுலகத்துள்ளே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.