Corpus pasurams 3508–3518

This page preserves the source-defined decade 7, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 718 · corpus 3508

Pasuram 718

Study resources at Uveda
பா மரு மூவுலகும் படைத்த * பற்பநாபா ஓ *
 பா மரு மூவுலகும் அளந்த * பற்ப பாதா ஓ **
 தாமரைக் கண்ணா ஓ! * தனியேன் தனி ஆளா ஓ *
 தாமரைக் கையா ஓ! * உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)

Pasuram 719 · corpus 3509

Pasuram 719

Study resources at Uveda
என்றுகொல் சேர்வது அந்தோ! * அரன் நான்முகன் ஏத்தும் * செய்ய
 நின் திருப்பாதத்தை * யான்? நிலம் நீர் எரி கால் ** விண் உயிர்
 என்று இவை தாம் முதலா * முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ *
 குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து * அவை காத்த எம் கூத்தா ஓ! (2)

Pasuram 720 · corpus 3510

Pasuram 720

Study resources at Uveda
காத்த எம் கூத்தா ஓ! * மலை ஏந்திக் கல் மாரி தன்னை *
 பூத் தண் துழாய் முடியாய் * புனை கொன்றை அம் செஞ்சடையாய் **
 வாய்த்த என் நான்முகனே! * வந்து என் ஆர் உயிர் நீ ஆனால் *
 ஏத்து அரும் கீர்த்தியினாய்! * உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)

Pasuram 721 · corpus 3511

Pasuram 721

Study resources at Uveda
எங்குத் தலைப்பெய்வன் நான் * எழில் மூவுலகும் நீயே *
 அங்கு உயர் முக்கண் பிரான் * பிரம பெருமான் அவன் நீ **
 வெம் கதிர் வச்சிரக் கை * இந்திரன் முதலாத் தெய்வம் நீ; *
 கொங்கு அலர் தண் அம் துழாய் முடி * என்னுடைக் கோவலனே! (4)

Pasuram 722 · corpus 3512

Pasuram 722

Study resources at Uveda
என்னுடைக் கோவலனே! * என் பொல்லாக் கருமாணிக்கமே *
 உன்னுடை உந்தி மலர் * உலகம் அவை மூன்றும் பரந்து **
 உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் * உன்னைக் கண்டு கொண்டிட்டு *
 என்னுடை ஆர் உயிரார் * எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)

Pasuram 723 · corpus 3513

Pasuram 723

Study resources at Uveda
வந்து எய்துமாறு அறியேன் * மல்கு நீலச் சுடர் தழைப்ப *
 செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து * ஒரு மாணிக்கம் சேர்வது போல் **
 அந்தரமேல் செம்பட்டோடு * அடி உந்தி கை மார்பு கண் வாய் *
 செஞ்சுடர்ச் சோதி விட உறை * என் திருமார்பனையே (6)

Pasuram 724 · corpus 3514

Pasuram 724

Study resources at Uveda
என் திருமார்பன் தன்னை * என் மலைமகள் கூறன் தன்னை *
 என்றும் என் நாமகளை அகம்பால் * கொண்ட நான்முகனை **
 நின்ற சசிபதியை * நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த *
 வென்று புலன் துரந்த * விசும்பு ஆளியைக் காணேனோ! (7)

Pasuram 725 · corpus 3515

Pasuram 725

Study resources at Uveda
ஆளியைக் காண் பரியாய் * அரி காண் நரியாய் * அரக்கர்
 ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து * பிலம் புக்கு ஒளிப்ப **
 மீளி அம் புள்ளைக் கடாய் * விறல் மாலியைக் கொன்று * பின்னும்
 ஆள் உயர் குன்றங்கள் செய்து * அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)

Pasuram 726 · corpus 3516

Pasuram 726

Study resources at Uveda
காண்டும்கொலோ நெஞ்சமே! * கடிய வினையே முயலும் *
 ஆண் திறல் மீளி மொய்ம்பின் * அரக்கன் குலத்தைத் தடிந்து **
 மீண்டும் அவன் தம்பிக்கே * விரி நீர் இலங்கை அருளி *
 ஆண்டு தன் சோதி புக்க * அமரர் அரியேற்றினையே? (9)

Pasuram 727 · corpus 3517

Pasuram 727

Study resources at Uveda
ஏற்று அரும் வைகுந்தத்தை * அருளும் நமக்கு * ஆயர் குலத்து
 ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு * மாயங்களே இயற்றி **
 கூற்று இயல் கஞ்சனைக் கொன்று * ஐவர்க்கு ஆய்க் கொடும் சேனை தடிந்து *
 ஆற்றல் மிக்கான் பெரிய * பரஞ்சோதி புக்க அரியே (10)

Pasuram 728 · corpus 3518

Pasuram 728

Study resources at Uveda
புக்க அரி உரு ஆய் * அவுணன் உடல் கீண்டு உகந்த *
 சக்கரச் செல்வன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 மிக்க ஓர் ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவரை *
 தொக்குப் பல்லாண்டு இசைத்துக் * கவரிசெய்வர் ஏழையரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.