Corpus pasurams 3519–3529

This page preserves the source-defined decade 7, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 729 · corpus 3519

Pasuram 729

Study resources at Uveda
ஏழையர் ஆவி உண்ணும் * இணைக் கூற்றம்கொலோ? அறியேன் *
 ஆழி அம் கண்ண பிரான் * திருக்கண்கள் கொலோ? அறியேன் **
 சூழவும் தாமரை நாள் மலர் போல் * வந்து தோன்றும் கண்டீர் *
 தோழியர்காள் அன்னைமீர்! * என் செய்கேன் துயராட்டியேனே? (1)

Pasuram 730 · corpus 3520

Pasuram 730

Study resources at Uveda
ஆட்டியும் தூற்றியும் நின்று * அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்? *
 மாட்டு உயர் கற்பகத்தின் * வல்லியோ? கொழுந்தோ? அறியேன்? **
 ஈட்டிய வெண்ணெய் உண்டான் * திருமூக்கு எனது ஆவியுள்ளே *
 மாட்டிய வல் விளக்கின் * சுடராய் நிற்கும் வாலியதே (2)

Pasuram 731 · corpus 3521

Pasuram 731

Study resources at Uveda
வாலியது ஓர் கனிகொல்? * வினையாட்டியேன் வல்வினைகொல்? *
 கோலம் திரள் பவளக் * கொழும் துண்டம்கொலோ? அறியேன் **
 நீல நெடு முகில் போல் * திருமேனி அம்மான் தொண்டைவாய் *
 ஏலும் திசையுள் எல்லாம் * வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே (3)

Pasuram 732 · corpus 3522

Pasuram 732

Study resources at Uveda
இன் உயிர்க்கு ஏழையர்மேல் * வளையும் இணை நீல விற்கொல் *
 மன்னிய சீர் மதனன் * கருப்புச் சிலைகொல் ** மதனன்
 தன் உயிர்த் தாதை * கண்ண பெருமான் புருவம்? அவையே *
 என் உயிர் மேலனவாய் * அடுகின்றன என்று நின்றே (4)

Pasuram 733 · corpus 3523

Pasuram 733

Study resources at Uveda
என்றும் நின்றே திகழும் * செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்? *
 அன்றி என் ஆவி அடும் * அணி முத்தம்கொலோ? அறியேன் **
 குன்றம் எடுத்த பிரான் * முறுவல் எனது ஆவி அடும் *
 ஒன்றும் அறிகின்றிலேன் * அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே (5)

Pasuram 734 · corpus 3524

Pasuram 734

Study resources at Uveda
உய்வு இடம் ஏழையர்க்கும் * அசுரர்க்கும் அரக்கர்கட்கும் *
 எவ்விடம் என்று இலங்கி * மகரம் தழைக்கும் தளிர்கொல் **
 பை விடப் பாம்பு அணையான் * திருக் குண்டலக் காதுகளே? *
 கைவிடல் ஒன்றும் இன்றி * அடுகின்றன காண்மின்களே (6)

Pasuram 735 · corpus 3525

Pasuram 735

Study resources at Uveda
காண்மின்கள் அன்னையர்காள் * என்று காட்டும் வகை அறியேன் *
 நாள் மன்னு வெண் திங்கள் கொல் * நயந்தார்கட்கு நச்சு இலைகொல் **
 சேண் மன்னு நால் தடம் தோள் * பெருமான் தன் திரு நுதலே? *
 கோள் மன்னி ஆவி அடும் * கொடியேன் உயிர் கோள் இழைத்தே (7)

Pasuram 736 · corpus 3526

Pasuram 736

Study resources at Uveda
கோள் இழைத் தாமரையும் * கொடியும் பவளமும் வில்லும் *
 கோள் இழைத் தண் முத்தமும் * தளிரும் குளிர் வான் பிறையும் **
 கோள் இழையா உடைய * கொழும் சோதிவட்டம் கொல் * கண்ணன்
 கோள் இழை வாள் முகமாய்க் * கொடியேன் உயிர் கொள்கின்றதே? (8)

Pasuram 737 · corpus 3527

Pasuram 737

Study resources at Uveda
கொள்கின்ற கோள் இருளைச் * சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் *
 உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? * அன்று மாயன் குழல் **
 விள்கின்ற பூந் தண் துழாய் * விரை நாற வந்து என் உயிரைக் *
 கள்கின்றவாறு அறியீர் * அன்னைமீர்! கழறா நிற்றிரே (9)

Pasuram 738 · corpus 3528

Pasuram 738

Study resources at Uveda
நிற்றி முற்றத்துள் என்று * நெரித்த கையர் ஆய் * என்னை நீர்
 சுற்றியும் சூழ்ந்தும் * வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய் **
 முற்ற இம் மூவுலகும் * விரிகின்ற சுடர் முடிக்கே *
 ஒற்றுமை கொண்டது உள்ளம் * அன்னைமீர் நசை என் நுங்கட்கே? (10)

Pasuram 739 · corpus 3529

Pasuram 739

Study resources at Uveda
கட்கு அரிய பிரமன் சிவன் * இந்திரன் என்று இவர்க்கும் *
 கட்கு அரிய கண்ணனைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 உட்கு உடை ஆயிரத்துள் * இவையும் ஒரு பத்தும் வல்லார் *
 உட்கு உடை வானவரோடு * உடனாய் என்றும் மாயாரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.