Corpus pasurams 3530–3540

This page preserves the source-defined decade 7, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 740 · corpus 3530

Pasuram 740

Study resources at Uveda
மாயா வாமனனே! * மதுசூதா நீ அருளாய் *
 தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் * விசும்பு ஆய்க் கால் ஆய் **
 தாய் ஆய்த் தந்தை ஆய் * மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய் *
 நீ ஆய் நீ நின்றவாறு * இவை என்ன நியாயங்களே (1)

Pasuram 741 · corpus 3531

Pasuram 741

Study resources at Uveda
அம் கள் மலர்த் தண் துழாய் முடி * அச்சுதனே அருளாய் *
 திங்களும் ஞாயிறும் ஆய்ச் * செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய் **
 பொங்கு பொழி மழை ஆய்ப் * புகழ் ஆய்ப் பழி ஆய்ப் பின்னும் நீ
 வெம் கண் வெம் கூற்றமும் ஆம் * இவை என்ன விசித்திரமே (2)

Pasuram 742 · corpus 3532

Pasuram 742

Study resources at Uveda
சித்திரத் தேர் வலவா * திருச் சக்கரத்தாய் அருளாய் *
 எத்தனை ஓர் உகமும் * அவை ஆய் அவற்றுள் இயலும் **
 ஒத்த ஒண் பல் பொருள்கள் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் *
 வித்தகத்தாய் நிற்றி நீ * இவை என்ன விடமங்களே (3)

Pasuram 743 · corpus 3533

Pasuram 743

Study resources at Uveda
கள் அவிழ் தாமரைக்கண் * கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் *
 உள்ளதும் இல்லதும் ஆய் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் **
 வெள்ளத் தடம் கடலுள் * விட நாகு அணைமேல் மருவி *
 உள்ளப் பல் யோகு செய்தி * இவை என்ன உபாயங்களே! (4)

Pasuram 744 · corpus 3534

Pasuram 744

Study resources at Uveda
பாசங்கள் நீக்கி * என்னை உனக்கே அறக் கொண்டிட்டு * நீ
 வாச மலர்த் தண் துழாய் முடி * மாயவனே அருளாய் **
 காயமும் சீவனும் ஆய்க் * கழிவு ஆய்ப் பிறப்பு ஆய் பின்னும் நீ *
 மாயங்கள் செய்து வைத்தி * இவை என்ன மயக்குக்களே (5)

Pasuram 745 · corpus 3535

Pasuram 745

Study resources at Uveda
மயக்கா வாமனனே! * மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் *
 அயர்ப்பு ஆய்த் தேற்றமும் ஆய் * அழல் ஆய்க் குளிர் ஆய் வியவு ஆய் **
 வியப்பு ஆய் வென்றிகள் ஆய் * வினை ஆய்ப் பயன் ஆய் பின்னும் நீ *
 துயக்கு ஆய் நீ நின்றவாறு * இவை என்ன துயரங்களே (6)

Pasuram 746 · corpus 3536

Pasuram 746

Study resources at Uveda
துயரங்கள் செய்யும் கண்ணா * சுடர் நீள் முடியாய் அருளாய் *
 துயரம் செய் மானங்கள் ஆய் * மதன் ஆகி உகவைகள் ஆய் **
 துயரம் செய் காமங்கள் ஆய்த் * துலை ஆய் நிலை ஆய் நடை ஆய் *
 துயரங்கள் செய்து வைத்தி * இவை என்ன சுண்டாயங்களே (7)

Pasuram 747 · corpus 3537

Pasuram 747

Study resources at Uveda
என்ன சுண்டாயங்களால் * நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? *
 இன்னது ஓர் தன்மையை என்று * உன்னை யாவர்க்கும் தேற்றரியை **
 முன்னிய மூவுலகும் * அவை ஆய் அவற்றைப் படைத்து *
 பின்னும் உள்ளாய் புறத்தாய்! * இவை என்ன இயற்கைகளே (8)

Pasuram 748 · corpus 3538

Pasuram 748

Study resources at Uveda
என்ன இயற்கைகளால் * எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? *
 துன்னு கரசரணம் முதலாக * எல்லா உறுப்பும் **
 உன்னு சுவை ஒளி * ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே *
 உன்னை உணரவுறில் * உலப்பு இல்லை நுணுக்கங்களே (9)

Pasuram 749 · corpus 3539

Pasuram 749

Study resources at Uveda
இல்லை நுணுக்கங்களே * இதனில் பிறிது என்னும் வண்ணம் *
 தொல்லை நல் நூலில் சொன்ன * உருவும் அருவும் நீயே **
 அல்லித் துழாய் அலங்கல் * அணி மார்ப என் அச்சுதனே *
 வல்லது ஓர் வண்ணம் சொன்னால் * அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10)

Pasuram 750 · corpus 3540

Pasuram 750

Study resources at Uveda
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று * அறிவது அரிய அரியை *
 ஆம் வண்ணத்தால் * குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த **
 ஆம் வண்ண ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
 ஆம் வண்ணத்தால் உரைப்பார் * அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.