This page preserves the source-defined decade 8, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
நான் இளைக்கின்றிலன் * கண்டுகொள்மின் *
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் *
நல் நுதலீர் இனி நாணித் தான் என் **
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த *
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட *
கோல வளையொடும் மாமை கொள்வான் *
எத்தனை காலமும் கூடச் சென்றே? (3)
கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்? *
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம் *
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் *
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன் **
மாடக் கொடி மதிள் தென் குளந்தை *
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் *
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் *
ஆழிவலவனை ஆதரித்தே (4)
மால் அரி கேசவன் நாரணன் * சீமாதவன்
கோவிந்தன் வைகுந்தன் என்று என்று *
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு *
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் **
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் *
என்னுடைத் தோழியர்காள் * என் செய்கேன்? *
காலம் பல சென்றும் காண்பது ஆணை *
உங்களோடு எங்கள் இடை இல்லையே (7)
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் *
பூவைகள்காள் குயில்காள் மயில்காள்! *
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் *
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான் **
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் *
அஞ்சன வெற்பும் அவை நணிய *
கடையறப் பாசங்கள் விட்டபின்னை அன்றி *
அவன் அவை காண்கொடானே (8)
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் *
யான் இனிச் செய்வது என் நெஞ்சு என்னை *
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி *
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு **
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு *
பால் மதி ஏந்தி ஓர் கோல நீல *
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் *
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே (10)
பாதம் அடைவதன் பாசத்தாலே *
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு *
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல் *
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன **
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் *
இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் *
ஆதும் ஓர் தீது இலர் ஆகி * அங்கும் இங்கும்
எல்லாம் அமைவார்கள் தாமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.