This page preserves the source-defined decade 8, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
உணர்வில் உம்பர் ஒருவனை *
அவனது அருளால் உறற்பொருட்டு * என்
உணர்வின் உள்ளே இருத்தினேன் *
அதுவும் அவனது இன் அருளே **
உணர்வும் உயிரும் உடம்பும் *
மற்று உலப்பிலனவும் பழுதேயாம் *
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி *
யானும் தானாய் ஒழிந்தானே (3)
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு *
அதன் நுண் நேர்மை அது இது என்று *
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது *
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது **
சென்று சென்று பரம்பரம் ஆய் *
யாதும் இன்றித் தேய்ந்து அற்று *
நன்று தீது என்று அறிவு அரிதாய் *
நன்றாய் ஞானம் கடந்ததே (5)
நன்றாய் ஞானம் கடந்துபோய் *
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து *
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ் *
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து **
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் *
செற்றுக் களைந்து பசை அற்றால் *
அன்றே அப்போதே வீடு *
அதுவே வீடு வீடாமே (6)
அதுவே வீடு வீடுபேற்று *
இன்பம் தானும் அது தேறி *
எதுவே தானும் பற்று இன்றி *
யாதும் இலிகள் ஆகிற்கில் **
அதுவே வீடு வீடுபேற்று *
இன்பம் தானும் அது தேறாது *
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று *
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே (7)
கூடிற்றாகில் நல் உறைப்புக் *
கூடாமையைக் கூடினால் *
ஆடல் பறவை உயர் கொடி * எம்
மாயன் ஆவது அது அதுவே **
வீடைப் பண்ணி ஒரு பரிசே *
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் *
ஓடித் திரியும் யோகிகளும் *
உளரும் இல்லை அல்லரே (9)
உளரும் இல்லை அல்லராய் *
உளராய் இல்லை ஆகியே *
உளர் எம் ஒருவர் அவர் வந்து * என்
உள்ளத்துள்ளே உறைகின்றார் **
வளரும் பிறையும் தேய் பிறையும்
போல * அசைவும் ஆக்கமும் *
வளரும் சுடரும் இருளும் போல் *
தெருளும் மருளும் மாய்த்தோமே (10)