This page preserves the source-defined decade 8, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கரு மாணிக்க மலைமேல் * மணித் தடம்
தாமரைக் காடுகள் போல் *
திருமார்வு வாய் கண் கை * உந்தி கால் உடை
ஆடைகள் செய்ய பிரான் **
திருமால் எம்மான் செழு நீர் வயல் * குட்ட
நாட்டுத் திருப்புலியூர் *
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் * அன்னைமீர்!
இதற்கு என் செய்கேனோ? (1)
அன்னைமீர் இதற்கு என் * செய்கேன்? அணி
மேருவின் * மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் *
பல் சுடர்களும் போல் **
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் * தான்
உடை எம்பெருமான் *
புன்னை அம் பொழில் சூழ் * திருப்புலியூர்
புகழும் இவளே (2)
புகழும் இவள் நின்று இராப்பகல் * பொரு நீர்க்
கடல் தீப் பட்டு * எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்பச் *
செழும் கதிர் ஆழி முதல் **
புகழும் பொரு படை ஏந்தி * போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான் *
திகழும் மணி நெடு மாடம் நீடு *
திருப்புலியூர் வளமே (3)
ஊர் வளம் கிளர் சோலையும் * கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து *
ஏர் வளம் கிளர் தண் பணைக் * குட்ட
நாட்டுத் திருப்புலியூர் **
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் *
தேவ பிரான் *
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள் *
இன்று இப் புனை இழையே (4)
புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் *
புதுக்கணிப்பும் *
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது * நின்று
நினைக்கப்புக்கால் **
சுனையினுள் தடம் தாமரை மலரும் *
தண் திருப்புலியூர் *
முனைவன் மூவுலகு * ஆளி அப்பன்
திரு அருள் மூழ்கினளே (5)
திரு அருள் மூழ்கி வைகலும் * செழு நீர்
நிறக் கண்ண பிரான் *
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு * அடை
யாளம் திருந்த உள **
திரு அருள் அருளால் அவன் * சென்று
சேர் தண் திருப்புலியூர் *
திரு அருள் கமுகு ஒண் பழத்தது *
மெல்லியல் செவ்விதழே (6)
பரவாள் இவள் நின்று இராப்பகல் * பனி நீர்
நிறக் கண்ண பிரான் *
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி * வேலையின்
நின்று ஒலிப்ப **
கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம் *
தீவிகை நின்று அலரும் *
புரவு ஆர் கழனிகள் சூழ் * திருப்புலியூர்ப்
புகழ் அன்றி மற்றே (9)
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் *
நாயகன் தன் அடிமை *
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் *
தொண்டன் சடகோபன் சொல் **
நேர்பட்ட தமிழ் மாலை *
ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் * அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.