This page preserves the source-defined decade 9, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் * சுற்றத்தவர் பிறரும் *
கண்டதோடு பட்டது அல்லால் * காதல் மற்று யாதும் இல்லை **
எண் திசையும் கீழும் மேலும் * முற்றவும் உண்ட பிரான் *
தொண்டரோமாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் துணையே (1)
மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் * மா நிலத்து எவ் உயிர்க்கும் *
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் * கண்டீர்கள் அந்தோ **
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் * வடமதுரைப் பிறந்தான் *
குற்றம் இல் சீர் கற்று வைகல் * வாழ்தல் கண்டீர் குணமே (7)
யாதும் இல்லை மிக்கு அதனில் * என்று என்று அது கருதி *
காது செய்வான் கூதை செய்து * கடைமுறை வாழ்க்கையும் போம் **
மா துகிலின் கொடிக்கொள் மாட * வடமதுரைப் பிறந்த *
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் * இல்லை கண்டீர் சரணே (9)
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் * சரண் அது நிற்க வந்து *
மண்ணின் பாரம் நீக்குதற்கே * வடமதுரைப் பிறந்தான் *
திண்ணமா நும் உடைமை உண்டேல் * அவன் அடி சேர்த்து உய்ம்மினோ **
எண்ண வேண்டா நும்மது ஆதும் * அவன் அன்றி மற்று இல்லையே (10)