Corpus pasurams 3684–3694

This page preserves the source-defined decade 9, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 894 · corpus 3684

Pasuram 894

Study resources at Uveda
பண்டை நாளாலே நின் திரு அருளும் *
 பங்கயத்தாள் திரு அருளும்
 கொண்டு * நின் கோயில் சீய்த்து பல்படிகால் *
 குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் **
 தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து * உன்
 தாமரைக் கண்களால் நோக்காய் *
 தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த *
 திருப்புளிங்குடிக் கிடந்தானே! (1)

Pasuram 895 · corpus 3685

Pasuram 895

Study resources at Uveda
குடிக்கிடந்து ஆக்கம் செய்து * நின் தீர்த்த
 அடிமைக் குற்றேவல்செய்து * உன் பொன்
 அடிக் கடவாதே வழி வருகின்ற *
 அடியரோர்க்கு அருளி ** நீ ஒருநாள்
 படிக்கு அளவாக நிமிர்த்த * நின் பாத
 பங்கயமே தலைக்கு அணியாய் *
 கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத் *
 திருப்புளிங்குடிக் கிடந்தானே (2)

Pasuram 896 · corpus 3686

Pasuram 896

Study resources at Uveda
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
 கிடத்தி * உன் திருஉடம்பு அசைய *
 தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
 வழி வரும் * தொண்டரோர்க்கு அருளி **
 தடம் கொள் தாமரைக் கண் விழித்து *
 நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் *
 இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் *
 திருப்புளிங்குடிக் கிடந்தானே (3)

Pasuram 897 · corpus 3687

Pasuram 897

Study resources at Uveda
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
 இருந்து * வைகுந்தத்துள் நின்று *
 தெளிந்த என் சிந்தையகம் கழியாதே *
 என்னை ஆள்வாய் எனக்கு அருளி **
 நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப *
 நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப *
 பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் * கனிவாய்
 சிவப்ப நீ காண வாராயே (4)

Pasuram 898 · corpus 3688

Pasuram 898

Study resources at Uveda
பவளம்போல் கனி வாய் சிவப்ப
 நீ காண வந்து * நின் பல் நிலா முத்தம் *
 தவழ் கதிர் முறுவல் செய்து * நின் திருக்கண்
 தாமரை தயங்க நின்றருளாய் **
 பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல் *
 தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் *
 கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் *
 காய் சினப் பறவை ஊர்ந்தானே (5)

Pasuram 899 · corpus 3689

Pasuram 899

Study resources at Uveda
காய் சினப் பறவை ஊர்ந்து * பொன் மலையின்
 மீமிசைக் கார் முகில் போல *
 மா சின மாலி மாலிமான் என்று * அங்கு
 அவர் படக் கனன்று முன் நின்ற **
 காய் சின வேந்தே கதிர் முடியானே *
 கலி வயல் திருப்புளிங்குடியாய் *
 காய் சின ஆழி சங்கு வாள் வில்
 தண்டு ஏந்தி * எம் இடர் கடிவானே (6)

Pasuram 900 · corpus 3690

Pasuram 900

Study resources at Uveda
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே! *
 இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய் *
 செம் மடல் மலருந் தாமரைப் பழனத் *
 தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் **
 நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து *
 நாம் களித்து உளம் நலம் கூர *
 இம் மட உலகர் காண நீ ஒருநாள் *
 இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7)

Pasuram 901 · corpus 3691

Pasuram 901

Study resources at Uveda
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் *
 இணை அடி தொழுது எழுது இறைஞ்சி *
 தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் *
 தலைத்தலைச் சிறந்து பூசிப்ப **
 திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் *
 திரு வைகுந்தத்துள்ளாய்! தேவா *
 இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் *
 இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8)

Pasuram 902 · corpus 3692

Pasuram 902

Study resources at Uveda
வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து *
 இதனுளும் இருந்திடாய் * அடியோம்
 போற்றி ஓவாதே கண் இணை குளிரப் *
 புது மலர் ஆகத்தைப் பருக **
 சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் *
 செழும் பனைத் திருப்புளிங்குடியாய் *
 கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த *
 கொடுவினைப் படைகள் வல்லானே (9)

Pasuram 903 · corpus 3693

Pasuram 903

Study resources at Uveda
கொடு வினைப் படைகள் வல்லையாய் * அமரர்க்கு
 இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் *
 கடு வினை நஞ்சே என்னுடை அமுதே *
 கலி வயல் திருப்புளிங்குடியாய் **
 வடிவு இணை இல்லா மலர்மகள் * மற்றை
 நிலமகள் பிடிக்கும் மெல் அடியை *
 கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் *
 கூவுதல் வருதல் செய்யாயே (10)

Pasuram 904 · corpus 3694

Pasuram 904

Study resources at Uveda
கூவுதல் வருதல் செய்திடாய் என்று *
 குரை கடல் கடைந்தவன் தன்னை *
 மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் *
 வழுதி நாடன் சடகோபன் **
 நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் *
 இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் *
 ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் *
 அடி இணை உள்ளத்து ஓர்வாரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.