Corpus pasurams 3761–3771

This page preserves the source-defined decade 9, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 971 · corpus 3761

Pasuram 971

Study resources at Uveda
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ! *
 வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ! *
 செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ! *
 செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ! **
 அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் *
 ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் *
 புல்லிய முலைகளும் தோளும் கொண்டு *
 புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ! (1)

Pasuram 972 · corpus 3762

Pasuram 972

Study resources at Uveda
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ *
 புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ *
 பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ *
 பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ **
 அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து *
 எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் *
 இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் *
 இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? (2)

Pasuram 973 · corpus 3763

Pasuram 973

Study resources at Uveda
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? *
 இணை முலை நமுக நுண் இடை நுடங்க *
 துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து *
 துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் **
 தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் *
 தாமரைக் கண்ணும் செவ்வாயும் * நீலப்
 பனி இரும் குழல்களும் நான்கு தோளும் *
 பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ (3)

Pasuram 974 · corpus 3764

Pasuram 974

Study resources at Uveda
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ *
 வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ *
 மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ *
 மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ **
 தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
 துதைந்த * எம் பெண்மை அம் பூ இது ஆலோ *
 ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ *
 யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ (4)

Pasuram 975 · corpus 3765

Pasuram 975

Study resources at Uveda
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ *
 ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ *
 யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ *
 அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ **
 யாமுடைத் துணை என்னும் தோழிமாரும் *
 எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ *
 யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்?
 அவனுடை அருள்பெறும் போது அரிதே (5)

Pasuram 976 · corpus 3766

Pasuram 976

Study resources at Uveda
அவனுடை அருள்பெறும் போது அரிதால் *
 அவ் அருள் அல்லன அருளும் அல்ல *
 அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது *
 அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் **
 சிவனொடு பிரமன் வண் திருமடந்தை *
 சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் *
 எவம் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ?
 ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் (6)

Pasuram 977 · corpus 3767

Pasuram 977

Study resources at Uveda
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்! *
 ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை *
 கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் *
 கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே **
 சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு *
 பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து *
 போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப் *
 புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ! (7)

Pasuram 978 · corpus 3768

Pasuram 978

Study resources at Uveda
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ! *
 பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ! *
 அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் *
 கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் **
 மது மண மல்லிகை மந்தக் கோவை *
 வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து *
 அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே *
 ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் (8)

Pasuram 979 · corpus 3769

Pasuram 979

Study resources at Uveda
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்! *
 அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத் *
 தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் *
 தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி **
 பேதுறு முகம்செய்து நொந்து நொந்து *
 பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை *
 யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம! *
 மாலையும் வந்தது மாயன் வாரான் (9)

Pasuram 980 · corpus 3770

Pasuram 980

Study resources at Uveda
மாலையும் வந்தது மாயன் வாரான் *
 மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த *
 கோல நல் நாகுகள் உகளும் ஆலோ! *
 கொடியன குழல்களும் குழறும் ஆலோ! **
 வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள் *
 மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ! *
 வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ! *
 என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? (10)

Pasuram 981 · corpus 3771

Pasuram 981

Study resources at Uveda
அவனைவிட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா *
 அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல் *
 அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி *
 அணி குருகூர்ச் சடகோபன் மாறன் **
 அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த *
 ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு *
 அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் *
 அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.