Corpus pasurams 3695–3705

This page preserves the source-defined decade 9, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 905 · corpus 3695

Pasuram 905

Study resources at Uveda
ஓர் ஆயிரமாய் * உலகு ஏழ் அளிக்கும் *
 பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் **
 கார் ஆயின * காள நல் மேனியினன் *
 நாரயணன் * நங்கள் பிரான் அவனே (1)

Pasuram 906 · corpus 3696

Pasuram 906

Study resources at Uveda
அவனே அகல் ஞாலம் * படைத்து இடந்தான் *
 அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் * அளந்தான் **
 அவனே அவனும் * அவனும் அவனும் *
 அவனே மற்று எல்லாமும் * அறிந்தனமே (2)

Pasuram 907 · corpus 3697

Pasuram 907

Study resources at Uveda
அறிந்தன வேத * அரும் பொருள் நூல்கள் *
 அறிந்தன கொள்க * அரும் பொருள் ஆதல் **
 அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி *
 அறிந்தனர் * நோய்கள் அறுக்கும் மருந்தே (3)

Pasuram 908 · corpus 3698

Pasuram 908

Study resources at Uveda
மருந்தே நங்கள் * போக மகிழ்ச்சிக்கு என்று *
 பெரும் தேவர் குழாங்கள் * பிதற்றும் பிரான் **
 கரும் தேவன் எம்மான் * கண்ணன் விண் உலகம் *
 தரும் தேவனைச் * சோரேல் கண்டாய் மனமே (4)

Pasuram 909 · corpus 3699

Pasuram 909

Study resources at Uveda
மனமே உன்னை * வல்வினையேன் இரந்து *
 கனமே சொல்லினேன் * இது சோரேல் கண்டாய்! **
 புனம் மேவிய * பூந் தண் துழாய் அலங்கல் *
 இனம் ஏதும் இலானை * அடைவதுமே (5)

Pasuram 910 · corpus 3700

Pasuram 910

Study resources at Uveda
அடைவதும் அணி ஆர் * மலர் மங்கைதோள் *
 மிடைவதும் * அசுரர்க்கு வெம் போர்களே **
 கடைவதும் * கடலுள் அமுதம் * என் மனம்
 உடைவதும் * அவற்கே ஒருங்காகவே (6)

Pasuram 911 · corpus 3701

Pasuram 911

Study resources at Uveda
ஆகம் சேர் * நரசிங்கம் அது ஆகி * ஓர்
 ஆகம் வள் உகிரால் * பிளந்தான் உறை **
 மாக வைகுந்தம் * காண்பதற்கு * என் மனம்
 ஏகம் எண்ணும் * இராப்பகல் இன்றியே (7)

Pasuram 912 · corpus 3702

Pasuram 912

Study resources at Uveda
இன்றிப் போக * இருவினையும் கெடுத்து *
 ஒன்றி யாக்கை புகாமை * உய்யக்கொள்வான் **
 நின்ற வேங்கடம் * நீள் நிலத்து உள்ளது
 சென்று தேவர்கள் * கைதொழுவார்களே (8)

Pasuram 913 · corpus 3703

Pasuram 913

Study resources at Uveda
தொழுது மா மலர் * நீர் சுடர் தூபம் கொண்டு *
 எழுதும் என்னும் இது * மிகை ஆதலின் **
 பழுது இல் தொல் புகழ்ப் * பாம்பு அணைப் பள்ளியாய் *
 தழுவுமாறு அறியேன் * உன தாள்களே (9)

Pasuram 914 · corpus 3704

Pasuram 914

Study resources at Uveda
தாள தாமரையான் * உனது உந்தியான் *
 வாள் கொள் நீள் மழு ஆளி * உன் ஆகத்தான் **
 ஆளராய்த் தொழுவாரும் * அமரர்கள் *
 நாளும் என் புகழ்கோ * உன சீலமே? (10)

Pasuram 915 · corpus 3705

Pasuram 915

Study resources at Uveda
சீலம் எல்லை இலான் * அடிமேல் அணி *
 கோலம் நீள் * குருகூர்ச் சடகோபன் ** சொல்
 மாலை ஆயிரத்துள் * இவை பத்தினின்
 பாலர் * வைகுந்தம் ஏறுதல் பான்மையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.