Corpus pasurams 3706–3716

This page preserves the source-defined decade 9, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 916 · corpus 3706

Pasuram 916

Study resources at Uveda
மை ஆர் கருங்கண்ணி * கமல மலர்மேல் *
 செய்யாள் திருமார்வினில் சேர் * திருமாலே **
 வெய்யார் சுடர் ஆழி * சுரி சங்கம் ஏந்தும்
 கையா * உன்னைக் காணக் * கருதும் என் கண்ணே (1)

Pasuram 917 · corpus 3707

Pasuram 917

Study resources at Uveda
கண்ணே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சம்
 எண்ணே கொண்ட * சிந்தையதாய் நின்று இயம்பும் **
 விண்ணோர் முனிவர்க்கு என்றும் * காண்பு அரியாயை *
 நண்ணாதொழியேன் என்று * நான் அழைப்பனே (2)

Pasuram 918 · corpus 3708

Pasuram 918

Study resources at Uveda
அழைக்கின்ற அடிநாயேன் * நாய் கூழை வாலால் *
 குழைக்கின்றது போல * என் உள்ளம் குழையும் **
 மழைக்கு அன்று குன்றம் எடுத்து * ஆநிரை காத்தாய் *
 பிழைக்கின்றது அருள் என்று * பேதுறுவனே (3)

Pasuram 919 · corpus 3709

Pasuram 919

Study resources at Uveda
உறுவது இது என்று * உனக்கு ஆள் பட்டு * நின்கண்
 பெறுவது எதுகொல் என்று * பேதையேன் நெஞ்சம் **
 மறுகல் செய்யும் * வானவர் தானவர்க்கு என்றும் *
 அறிவது அரிய * அரியாய அம்மானே (4)

Pasuram 920 · corpus 3710

Pasuram 920

Study resources at Uveda
அரியாய அம்மானை * அமரர் பிரானை *
 பெரியானை * பிரமனை முன் படைத்தானை **
 வரி வாள் அரவின் அணைப் * பள்ளிகொள்கின்ற *
 கரியான் கழல் காணக் * கருதும் கருத்தே (5)

Pasuram 921 · corpus 3711

Pasuram 921

Study resources at Uveda
கருத்தே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சத்து
 இருத்தாக இருத்தினேன் * தேவர்கட்கு எல்லாம் **
 விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி * உயரத்து
 ஒருத்தா * உன்னை உள்ளும் * என் உள்ளம் உகந்தே (6)

Pasuram 922 · corpus 3712

Pasuram 922

Study resources at Uveda
உகந்தே உன்னை * உள்ளும் என் உள்ளத்து * அகம்பால்
 அகம் தான் அமர்ந்தே * இடம் கொண்ட அமலா **
 மிகும் தானவன் மார்வு அகலம் * இரு கூறா
 நகந்தாய் * நரசிங்கம் அது ஆய உருவே (7)

Pasuram 923 · corpus 3713

Pasuram 923

Study resources at Uveda
உரு ஆகிய * ஆறு சமயங்கட்கு எல்லாம் *
 பொரு ஆகி நின்றான் * அவன் எல்லாப் பொருட்கும் **
 அரு ஆகிய ஆதியை * தேவர்கட்கு எல்லாம் *
 கரு ஆகிய கண்ணனை * கண்டுகொண்டேனே (8)

Pasuram 924 · corpus 3714

Pasuram 924

Study resources at Uveda
கண்டுகொண்டு * என் கண் இணை ஆரக் களித்து *
 பண்டை வினையாயின * பற்றோடு அறுத்து **
 தொண்டர்க்கு அமுது உண்ணச் * சொல் மாலைகள் சொன்னேன் *
 அண்டத்து அமரர் பெருமான் * அடியேனே (9)

Pasuram 925 · corpus 3715

Pasuram 925

Study resources at Uveda
அடியான் இவன் என்று * எனக்கு ஆர் அருள் செய்யும்
 நெடியானை * நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் **
 கொடியானை * குன்றாமல் * உலகம் அளந்த
 அடியானை அடைந்து அடியேன் * உய்ந்தவாறே (10)

Pasuram 926 · corpus 3716

Pasuram 926

Study resources at Uveda
ஆறா மதயானை * அடர்த்தவன் தன்னை *
 சேறு ஆர் வயல் * தென் குருகூர்ச் சடகோபன் **
 நூறே சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
 ஏறே தரும் * வானவர் தம் இன் உயிர்க்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.