This page preserves the source-defined decade 9, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு * இங்கு எத்தனை *
என் உயிர் நோவ மிழற்றேல்மின் * குயில் பேடைகாள் **
என் உயிர்க் கண்ண பிரானை * நீர் வரக் கூவுகிலீர் *
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் * இத்தனை வேண்டுமோ? (1)
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ! * அன்றில் பேடைகாள் *
எத்தனை நீரும் நும் சேவலும் * கரைந்து ஏங்குதிர்? **
வித்தகன் கோவிந்தன் * மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் *
அத்தனை ஆம் இனி * என் உயிர் அவன் கையதே (2)
அவன் கையதே எனது ஆர் உயிர் * அன்றில் பேடைகாள் *
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் * புடை சூழவே? **
தவம் செய்தில்லா * வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ *
எவன் சொல்லி நிற்றும் * நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3)
அந்தரம் நின்று உழல்கின்ற * யானுடைப் பூவைகாள் *
நும் திறத்து ஏதும் இடை இல்லை * குழறேல்மினோ **
இந்திர ஞாலங்கள் காட்டி * இவ் ஏழ் உலகும் கொண்ட *
நம் திரு மார்பன் * நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5)
நன்கு எண்ணி நான் வளர்த்த * சிறு கிளிப் பைதலே *
இன் குரல் நீ மிழற்றேல்! * என் ஆர் உயிர்க் காகுத்தன் **
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் * கண்ணன் கை காலினன் *
நின் பசும் சாம நிறத்தன் * கூட்டுண்டு நீங்கினான் (6)
உயிர்க்கு அது காலன் என்று * உம்மை யான் இரந்தேற்கு * நீர்
குயில் பைதல்காள் * கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் **
தயிர்ப் பழஞ் சோற்றொடு * பால் அடிசிலும் தந்து * சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! * பண்பு உடையீரே (8)
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் * பண் மிழற்றேல்மின் *
புண் புரை வேல் கொடு ** குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை * மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் * நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9)
எழ நண்ணி நாமும் * நம் வான நாடனோடு ஒன்றினோம் *
பழன நல் நாரைக் குழாங்கள்காள் * பயின்று என் இனி? **
இழை நல்ல ஆக்கையும் * பையவே புயக்கு அற்றது *
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து * எங்கும் தழைக்கவே (10)
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த * பல் ஊழிக்கு *
தன் புகழ் ஏத்தத் * தனக்கு அருள் செய்த மாயனை **
தென் குருகூர்ச் சடகோபன் * சொல் ஆயிரத்துள் இவை *
ஒன்பதோடு ஒன்றுக்கும் * மூவுலகும் உருகுமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.