Corpus pasurams 3728–3738

This page preserves the source-defined decade 9, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 938 · corpus 3728

Pasuram 938

Study resources at Uveda
உருகுமால் நெஞ்சம் * உயிரின் பரமன்றி *
 பெருகுமால் வேட்கையும் * என் செய்கேன் தொண்டனேன் **
 தெருவு எல்லாம் காவி கமழ் * திருக்காட்கரை *
 மருவிய மாயன் தன் * மாயம் நினைதொறே? (1)

Pasuram 939 · corpus 3729

Pasuram 939

Study resources at Uveda
நினைதொறும் சொல்லும்தொறும் * நெஞ்சு இடிந்து உகும் *
 வினைகொள் சீர் பாடிலும் * வேம் எனது ஆர் உயிர் **
 சுனைகொள் பூஞ்சோலைத் * தென் காட்கரை என் அப்பா
 நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)

Pasuram 940 · corpus 3730

Pasuram 940

Study resources at Uveda
நீர்மையால் நெஞ்சம் * வஞ்சித்துப் புகுந்து * என்னை
 ஈர்மைசெய்து * என் உயிர் ஆய் என் உயிர் உண்டான் **
 சீர் மல்கு சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
 கார் முகில் வண்ணன் தன் * கள்வம் அறிகிலேன் (3)

Pasuram 941 · corpus 3731

Pasuram 941

Study resources at Uveda
அறிகிலேன் தன்னுள் * அனைத்து உலகும் நிற்க *
 நெறிமையால் தானும் * அவற்றுள் நிற்கும் பிரான் **
 வெறி கமழ் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
 சிறிய என் ஆர் உயிர் உண்ட * திரு அருளே (4)

Pasuram 942 · corpus 3732

Pasuram 942

Study resources at Uveda
திரு அருள் செய்பவன் போல * என்னுள் புகுந்து *
 உருவமும் ஆர் உயிரும் * உடனே உண்டான் **
 திரு வளர் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
 கரு வளர் மேனி * என் கண்ணன் கள்வங்களே (5)

Pasuram 943 · corpus 3733

Pasuram 943

Study resources at Uveda
என் கண்ணன் கள்வம் * எனக்குச் செம்மாய் நிற்கும் *
 அம் கண்ணன் உண்ட * என் ஆர் உயிர்க் கோது இது **
 புன்கண்மை எய்திப் * புலம்பி இராப்பகல் *
 என் கண்ணன் என்று * அவன் காட்கரை ஏத்துமே (6)

Pasuram 944 · corpus 3734

Pasuram 944

Study resources at Uveda
காட்கரை ஏத்தும் * அதனுள் கண்ணா என்னும் *
 வேட்கை நோய் கூர * நினைந்து கரைந்து உகும் **
 ஆட்கொள்வான் ஒத்து * என் உயிர் உண்ட மாயனால் *
 கோள் குறைபட்டது * என் ஆர் உயிர் கோள் உண்டே (7)

Pasuram 945 · corpus 3735

Pasuram 945

Study resources at Uveda
கோள் உண்டான் அன்றி வந்து * என் உயிர் தான் உண்டான் *
 நாளும் நாள் வந்து * என்னை முற்றவும் தான் உண்டான் **
 காள நீர் மேகத் * தென் காட்கரை என் அப்பற்கு *
 ஆள் அன்றே பட்டது? * என் ஆர் உயிர் பட்டதே (8)

Pasuram 946 · corpus 3736

Pasuram 946

Study resources at Uveda
ஆர் உயிர் பட்டது * எனது உயிர் பட்டது *
 பேர் இதழ்த் தாமரைக் கண் * கனி வாயது ஓர் **
 கார் எழில் மேகத் * தென் காட்கரை கோயில் கொள்
 சீர் எழில் நால் தடம் தோள் * தெய்வவாரிக்கே? (9)

Pasuram 947 · corpus 3737

Pasuram 947

Study resources at Uveda
வாரிக்கொண்டு * உன்னை விழுங்குவன் காணில் என்று *
 ஆர்வு உற்ற என்னை ஒழிய * என்னில் முன்னம்
 பாரித்துத் ** தான் என்னை முற்றப் பருகினான் *
 கார் ஒக்கும் * காட்கரை அப்பன் கடியனே (10)

Pasuram 948 · corpus 3738

Pasuram 948

Study resources at Uveda
கடியனாய்க் கஞ்சனைக் * கொன்ற பிரான் தன்னை *
 கொடி மதிள் தென் குருகூர்ச் * சடகோபன் சொல் **
 வடிவு அமை ஆயிரத்து * இப் பத்தினால் சன்மம்
 முடிவு எய்தி * நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.