This page preserves the source-defined decade 9, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
எம் கானல் அகம் கழிவாய் * இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் *
செங்கால மட நாராய்! * திருமூழிக்களத்து உறையும் **
கொங்கு ஆர் பூந் துழாய் முடி * எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
நும் கால்கள் என் தலைமேல் * கெழுமீரோ நுமரோடே (1)
தக்கிலமே கேளீர்கள்! * தடம் புனல்வாய் இரை தேரும் *
கொக்கு இனங்காள்! குருகு இனங்காள்! * குளிர்மூழிக்களத்து உறையும் **
செக்கமலத்து அலர் போலும் * கண் கை கால் செங்கனி வாய் *
அக் கமலத்து இலை போலும் * திருமேனி அடிகளுக்கே (3)
தூது உரைத்தல் செப்புமின்கள் * தூ மொழி வாய் வண்டு இனங்காள் *
போது இரைத்து மது நுகரும் * பொழில் மூழிக்களத்து உறையும் **
மாதரைத் தம் மார்வகத்தே * வைத்தார்க்கு என் வாய் மாற்றம் *
தூது உரைத்தல் செப்புதிரேல்! * சுடர் வளையும் கலையுமே (6)
சுடர் வளையும் கலையும் கொண்டு * அருவினையேன் தோள் துறந்த *
படர் புகழான் * திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண் **
சுடர் பவள வாயனைக் கண்டு * ஒருநாள் ஓர் தூய் மாற்றம் *
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள்! * எனக்கு ஒன்று பணியீரே (7)
பூந் துழாய் முடியார்க்குப் * பொன் ஆழிக் கையாருக்கு *
ஏந்து நீர் இளம் குருகே! * திருமூழிக் களத்தாருக்கு **
ஏந்து பூண் முலை பயந்து * என் இணை மலர்க் கண் நீர் ததும்ப *
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் * தகவு அன்று என்று உரையீரே (9)
தகவு அன்று என்று உரையீர்கள் * தடம் புனல்வாய் இரை தேர்ந்து *
மிக இன்பம் பட மேவும் * மென் நடைய அன்னங்காள் **
மிக மேனி மெலிவு எய்தி * மேகலையும் ஈடு அழிந்து * என்
அகமேனி ஒழியாமே * திருமூழிக்களத்தார்க்கே (10)