Corpus pasurams 3750–3760

This page preserves the source-defined decade 9, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 960 · corpus 3750

Pasuram 960

Study resources at Uveda
அறுக்கும் வினையாயின * ஆகத்து அவனை *
 நிறுத்தும் மனத்து ஒன்றிய * சிந்தையினார்க்கு **
 வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
 குறுக்கும் வகை உண்டுகொலோ * கொடியேற்கே? (1)

Pasuram 961 · corpus 3751

Pasuram 961

Study resources at Uveda
கொடி ஏர் இடைக் * கோகனகத்தவள் கேள்வன் *
 வடி வேல் தடம் கண் * மடப் பின்னை மணாளன் **
 நெடியான் உறை சோலைகள் சூழ் * திருநாவாய் *
 அடியேன் அணுகப்பெறும் நாள் * எவைகொலோ? (2)

Pasuram 962 · corpus 3752

Pasuram 962

Study resources at Uveda
எவைகொல் அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
 கவையில் மனம் இன்றிக் * கண்ணீர்கள் கலுழ்வன் **
 நவை இல் திருநாரணன் சேர் * திருநாவாய் *
 அவையுள் புகலாவது ஓர் * நாள் அறியேனே (3)

Pasuram 963 · corpus 3753

Pasuram 963

Study resources at Uveda
நாளேல் அறியேன் * எனக்கு உள்ளன * நானும்
 மீளா அடிமைப் * பணி செய்யப் புகுந்தேன் **
 நீள் ஆர் மலர்ச் சோலைகள் * சூழ் திருநாவாய் *
 வாள் ஏய் தடம் கண் * மடப் பின்னை மணாளா (4)

Pasuram 964 · corpus 3754

Pasuram 964

Study resources at Uveda
மணாளன் மலர் மங்கைக்கும் * மண் மடந்தைக்கும் *
 கண்ணாளன் உலகத்து உயிர் * தேவர்கட்கு எல்லாம் **
 விண்ணாளன் விரும்பி உறையும் * திருநாவாய் *
 கண் ஆரக் களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்டே? (5)

Pasuram 965 · corpus 3755

Pasuram 965

Study resources at Uveda
கண்டே களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்கள் *
 தொண்டே உனக்காய் ஒழிந்தேன் * துரிசு இன்றி **
 வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
 கொண்டே உறைகின்ற * எம் கோவலர் கோவே? (6)

Pasuram 966 · corpus 3756

Pasuram 966

Study resources at Uveda
கோ ஆகிய * மா வலியை நிலம் கொண்டாய் *
 தேவாசுரம் செற்றவனே! * திருமாலே **
 நாவாய் உறைகின்ற * என் நாரண நம்பீ *
 ஆஆ அடியான் * இவன் என்று அருளாயே (7)

Pasuram 967 · corpus 3757

Pasuram 967

Study resources at Uveda
அருளாது ஒழிவாய் * அருள் செய்து * அடியேனைப்
 பொருளாக்கி * உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் **
 மருளே இன்றி * உன்னை என் நெஞ்சத்து இருத்தும் *
 தெருளே தரு * தென் திருநாவாய் என் தேவே (8)

Pasuram 968 · corpus 3758

Pasuram 968

Study resources at Uveda
தேவர் முனிவர்க்கு என்றும் * காண்டற்கு அரியன் *
 மூவர் முதல்வன் * ஒரு மூவுலகு ஆளி **
 தேவன் விரும்பி உறையும் * திருநாவாய் *
 யாவர் அணுகப் பெறுவார் * இனி? அந்தோ (9)

Pasuram 969 · corpus 3759

Pasuram 969

Study resources at Uveda
அந்தோ அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
 சிந்தை கலங்கித் * திருமால் என்று அழைப்பன் **
 கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
 வந்தே உறைகின்ற * எம் மா மணி வண்ணா (10)

Pasuram 970 · corpus 3760

Pasuram 970

Study resources at Uveda
வண்ணம் மணி மாட * நல் நாவாய் உள்ளானை *
 திண்ணம் மதிள் * தென் குருகூர்ச் சடகோபன் **
 பண் ஆர் தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
 மண் ஆண்டு * மணம் கமழ்வர் மல்லிகையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.