This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் * வேட்டை கொண்டாட்டு
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் ** புள் ஊரும் கள்வர்
தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன
வம்பு ஆர் வினாச் சொல்லவோ * எம்மை வைத்தது இவ் வான் புனத்தே?22
புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன் *
மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர் ** புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் * தெய்வத்து
இனம் ஓர் அனையீர்களாய் * இவையோ நும் இயல்வுகளே?23
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் * ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன * பெரு நீர்க் கண்கள் தம்மொடும் ** குன்றம் ஒன்றால்
புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க் *
கொயல்வாய் மலர்மேல் * மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே?24
எம் கோல் வளை முதலா * கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் *
செங்கோல் வளைவு விளைவிக்குமால் ** திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் *
நம் கோன் உகக்கும் துழாய் * என் செய்யாது இனி நானிலத்தே?25
சேமம் செங்கோன் அருளே * செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
ஏமம் பெற வையம் * சொல்லும் மெய்யே ** பண்டு எல்லாம் அறை கூய்
யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த் *
தாமம் புனைய * அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே27