Corpus pasurams 2508–2517

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 2508

Pasuram 31

Study resources at Uveda
இசைமின்கள் தூது என்று * இசைத்தால் இசையிலம் * என் தலைமேல்
 அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் ** அம் பொன் மா மணிகள்
 திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் * சிமய
 மிசை * மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே?31

Pasuram 32 · corpus 2509

Pasuram 32

Study resources at Uveda
மேகங்களோ உரையீர் * திருமால் திருமேனி ஒக்கும் *
 யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? ** உயிர் அளிப்பான்
 மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து * நும் தம்
 ஆகங்கள் நோவ * வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே?32

Pasuram 33 · corpus 2510

Pasuram 33

Study resources at Uveda
அருள் ஆர் திருச் சக்கரத்தால் * அகல் விசும்பும் நிலனும் *
 இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ** ஈங்கு ஓர் பெண்பால்
 பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ? *
 தெருளோம் அரவணையீர் * இவள் மாமை சிதைக்கின்றதே33

Pasuram 34 · corpus 2511

Pasuram 34

Study resources at Uveda
சிதைக்கின்றது ஆழி * என்று ஆழியைச் சீறி * தன் சீறடியால்
 உதைக்கின்ற நாயகம் * தன்னொடு மாலே ** உனதுதண் தார்
 ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்ப்
 பதைக்கின்ற மாதின்திறத்து * அறியேன் செயற்பாலதுவே34

Pasuram 35 · corpus 2512

Pasuram 35

Study resources at Uveda
பால் வாய்ப் பிறைப் பிள்ளை * ஒக்கலைக் கொண்டு * பகல் இழந்த
 மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை ** உலகு அளந்த
 மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் *
 சோல்வான் புகுந்து * இது ஓர் பனி வாடை துழாகின்றதே35

Pasuram 36 · corpus 2513

Pasuram 36

Study resources at Uveda
துழா நெடும் சூழ் இருள் என்று * தன் தண் தார் அது பெயரா
 எழா நெடு ஊழி * எழுந்த இக் காலத்தும் ** ஈங்கு இவளோ
 வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ * இலங்கைக்
 குழா நெடு மாடம் * இடித்த பிரானார் கொடுமைகளே36

Pasuram 37 · corpus 2514

Pasuram 37

Study resources at Uveda
கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய *
 கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து ** அரு வினையேன்
 நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற *
 தொடுங்கால் ஒசியும் இடை * இளமான் சென்ற சூழ் கடமே37

Pasuram 38 · corpus 2515

Pasuram 38

Study resources at Uveda
கடம் ஆயினகள் கழித்து * தன் கால் வன்மையால் பல நாள் *
 தடம் ஆயின புக்கு * நீர் நிலைநின்ற தவம் இதுகொல் **
 குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து *
 நடமாடிய பெருமான் * உரு ஒத்தன நீலங்களே?38

Pasuram 39 · corpus 2516

Pasuram 39

Study resources at Uveda
நீலத் தட வரைமேல் * புண்டரீக நெடுந் தடங்கள்
 போல * பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் ** பொங்கு முந்நீர்
 ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் *
 கோலம் கரிய பிரான் * எம் பிரான் கண்ணின் கோலங்களே39

Pasuram 40 · corpus 2517

Pasuram 40

Study resources at Uveda
கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய * குழாம் விரிந்த
 நீலக் கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன ** நேரிழையீர்
 ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே *
 ஏலப் புனைந்து என்னைமார் * எம்மை நோக்குவது என்றுகொலோ?40

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.