Corpus pasurams 2518–2527

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 2518

Pasuram 41

Study resources at Uveda
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் * இவ்வாறு வெம்மை
 ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ** ஓங்கு அசுரர்
 பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள் *
 மன்றில் நிறை பழி தூற்றி * நின்று என்னை வன் காற்று அடுமே41

Pasuram 42 · corpus 2519

Pasuram 42

Study resources at Uveda
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த *
 மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன ** மண்ணும் விண்ணும்
 என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த *
 தன் கால் பணிந்த என்பால் * எம் பிரான தடங் கண்களே42

Pasuram 43 · corpus 2520

Pasuram 43

Study resources at Uveda
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே *
 வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று ** மதி விகற்பால்
 விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் *
 எண்ணும் இடத்ததுவோ * எம்பிரானது எழில் நிறமே?43

Pasuram 44 · corpus 2521

Pasuram 44

Study resources at Uveda
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று *
 அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும் ** அங்கு அங்கு எல்லாம்
 உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் *
 பெற முயன்றார் இல்லையால் * எம்பிரான பெருமையையே44

Pasuram 45 · corpus 2522

Pasuram 45

Study resources at Uveda
பெருங் கேழலார் தம் * பெருங் கண் மலர்ப் புண்டரீகம் * நம் மேல்
 ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ** ஒருவர் நம் போல்
 வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு *
 மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே45

Pasuram 46 · corpus 2523

Pasuram 46

Study resources at Uveda
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் * ஓர் கருமம் கருதி
 விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் ** அப்பொன்பெயரோன்
 தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட * போய்த்
 திட நெஞ்சம் ஆய் * எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே46

Pasuram 47 · corpus 2524

Pasuram 47

Study resources at Uveda
திரிகின்றது வட மாருதம் * திங்கள் வெம் தீ முகந்து *
 சொரிகின்றது அதுவும் அது * கண்ணன் விண்ணூர் தொழவே
 சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை *
 விரிகின்றது முழு மெய்யும் * என் ஆம் கொல் என் மெல்லியற்கே?47

Pasuram 48 · corpus 2525

Pasuram 48

Study resources at Uveda
மெல்லியல் ஆக்கைக் கிருமி * குருவில் மிளிர்தந்து ஆங்கே *
 செல்லிய செல்கைத்து உலகை என் காணும் ** என்னாலும் தன்னைச்
 சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் *
 பல்லியின் சொல்லும் சொல்லா * கொள்வதோ உண்டு பண்டுபண்டே48

Pasuram 49 · corpus 2526

Pasuram 49

Study resources at Uveda
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் * இப் பாய் இருள் போல்
 கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் ** காள வண்ண
 வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன் *
 உண்டும் உமிழ்ந்தும் கடாய * மண் நேர் அன்ன ஒள் நுதலே49

Pasuram 50 · corpus 2527

Pasuram 50

Study resources at Uveda
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர் *
 நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று ** தேன் நவின்ற
 விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய் *
 மண் முதல் சேர்வுற்று * அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே50

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.