Corpus pasurams 2528–2537

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 51 · corpus 2528

Pasuram 51

Study resources at Uveda
மலை கொண்டு மத்தா அரவால் * சுழற்றிய மாயப் பிரான் *
 அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் ** பரதர்
 விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத் *
 துலை கொண்டு தாயம் கிளர்ந்து * கொள்வான் ஒத்து அழைக்கின்றதே51

Pasuram 52 · corpus 2529

Pasuram 52

Study resources at Uveda
அழைக்கும் கருங் கடல் * வெண் திரைக் கைக்கொண்டு போய் * அலர்வாய்
 மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற ** மண் மாதர் விண்வாய்
 அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய் *
 மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே52

Pasuram 53 · corpus 2530

Pasuram 53

Study resources at Uveda
வார் ஆயின முலையாள் இவள் * வானோர் தலைமகன் ஆம் *
 சீர் ஆயின தெய்வ நல் நோய் இது ** தெய்வத் தண் அம் துழாய்த்
 தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் * கீழ்
 வேர் ஆயினும் * நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே53

Pasuram 54 · corpus 2531

Pasuram 54

Study resources at Uveda
வீசும் சிறகால் பறத்தீர் * விண் நாடு நுங்கட்கு எளிது *
 பேசும் படி அன்ன பேசியும் போவது ** நெய் தொடு உண்டு
 ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் *
 மாசு இல் மலர் அடிக்கீழ் * எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே54

Pasuram 55 · corpus 2532

Pasuram 55

Study resources at Uveda
வண்டுகளோ வம்மின் * நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ *
 உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் * ஏனம் ஒன்றாய் **
 மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் *
 விண்டு கள் வாரும் * மலர் உளவோ நும் வியலிடத்தே 55

Pasuram 56 · corpus 2533

Pasuram 56

Study resources at Uveda
வியலிடம் உண்ட பிரானார் * விடுத்த திருவருளால் *
 உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ** ஓர் தண் தென்றல் வந்து
 அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன் *
 புயலுடை நீர்மையினால் * தடவிற்று என் புலன் கலனே56

Pasuram 57 · corpus 2534

Pasuram 57

Study resources at Uveda
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை * வல்லி ஒன்றால்
 விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன ** கண்ணன் கையால்
 மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் *
 கலக்குண்ட நான்று கண்டார் * எம்மை யாரும் கழறலரே57

Pasuram 58 · corpus 2535

Pasuram 58

Study resources at Uveda
கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று * ஒரு கழல் போய்
 நிழல் தர * எல்லா விசும்பும் நிறைந்தது ** நீண்ட அண்டத்து
 உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா *
 அழறு அலர் தாமரைக் கண்ணன் * என்னோ இங்கு அளக்கின்றதே?58

Pasuram 59 · corpus 2536

Pasuram 59

Study resources at Uveda
அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் * அம் தண்ணம் துழாய்க்கு
 உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ** ஓங்கு முந்நீர்
 வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன் *
 தளப் பெரு நீள் முறுவல் * செய்ய வாய தட முலையே59

Pasuram 60 · corpus 2537

Pasuram 60

Study resources at Uveda
முலையோ முழு முற்றும் போந்தில * மொய் பூங் குழல் குறிய
 கலையோ அரை இல்லை நாவோ குழறும் ** கடல் மண் எல்லாம்
 விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
 மலையோ * திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே?60

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.