Pasuram 61 · corpus 2538
Pasuram 61
வாசகம் செய்வது நம்பரமே * தொல்லை வானவர் தம்
நாயகன் * நாயகர் எல்லாம் தொழும் அவன் ** ஞாலம் முற்றும்
வேய் அகம் ஆயினும் சோராவகை * இரண்டே அடியால்
தாயவன் * ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே?61
Nammazhvar · Reading part · pasurams 61–70
Corpus pasurams 2538–2547
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 61 · corpus 2538
வாசகம் செய்வது நம்பரமே * தொல்லை வானவர் தம்
நாயகன் * நாயகர் எல்லாம் தொழும் அவன் ** ஞாலம் முற்றும்
வேய் அகம் ஆயினும் சோராவகை * இரண்டே அடியால்
தாயவன் * ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே?61
Pasuram 62 · corpus 2539
இறையோ இரக்கினும் * ஈங்கு ஓர் பெண்பால் * எனவும் இரங்காது
அறையோ என * நின்று அதிரும் கருங்கடல் ** ஈங்கு இவள் தன்
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி * காப்பு அரிதால்
முறையோ * அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே?62
Pasuram 63 · corpus 2540
வண்ணம் சிவந்துள * வான் நாடு அமரும் குளிர் விழிய *
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன ** தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு *
எண்ணம் புகுந்து * அடியேனொடு இக் காலம் இருக்கின்றதே 63
Pasuram 64 · corpus 2541
இருக்கு ஆர் மொழியால் * நெறி இழுக்காமை * உலகு அளந்த
திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் ** யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் *
கருக்காய் கடிப்பவர் போல் * திருநாமச் சொல் கற்றனமே64
Pasuram 65 · corpus 2542
கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று * ஒரோ கருமம்
உற்றுப் பயின்று செவியொடு உசாவி ** உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் *
உற்றும் உறாதும் * மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே65
Pasuram 66 · corpus 2543
உண்ணாது உறங்காது * உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் *
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் ** எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் *
கண் ஆய் அருவினையேன் * உயிர் ஆயின காவிகளே66
Pasuram 67 · corpus 2544
காவியும் நீலமும் * வேலும் கயலும் பலபல வென்று *
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு ** அசுரரைச் செற்ற
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் * சேர்
தூவி அம் பேடை அன்னாள் * கண்கள் ஆய துணைமலரே67
Pasuram 68 · corpus 2545
மலர்ந்தே ஒழிந்தில * மாலையும் மாலைப் பொன் வாசிகையும் *
தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி ** பொரு கடல் சூழ்
நிலந்தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் *
கலந்தார் வரவு எதிர் கொண்டு * வன் கொன்றைகள் கார்த்தனவே68
Pasuram 69 · corpus 2546
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து * வெல்வான்
போர் ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை ** புவனி எல்லாம்
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே? *
வார் ஏற்று இளமுலையாய் * வருந்தேல் உன் வளைத்திறமே69
Pasuram 70 · corpus 2547
வளைவாய்த் திருச் சக்கரத்து * எங்கள் வானவனார் முடிமேல் *
தளைவாய் நறுங் கண்ணித் * தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை **
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க * எம்மை
உளைவான் புகுந்து * இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே70
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.