This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
ஊழிகள் ஆய் * உலகு ஏழும் உண்டான் என்றிலம் * பழம் கண்டு
ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு ** அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் *
தோழிகளோ உரையீர் * எம்மை அம்மனை சூழ்கின்றவே71
இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் * எழில் ஆர் தண் துழாய் *
வடம் போது இனையும் மட நெஞ்சமே ** நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் *
தடம் போது ஒடுங்க * மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே?76
திங்கள் அம் பிள்ளை புலம்ப * தன் செங்கோல் அரசு பட்ட *
செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை ** தென்பால் இலங்கை
வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா *
நங்களை மாமை கொள்வான் * வந்து தோன்றி நலிகின்றதே77
நலியும் நரகனை வீட்டிற்றும் * வாணன் திண் தோல் துணித்த *
வலியும் பெருமையும் * யாம் சொல்லும் நீர்த்து அல்ல ** மை வரை போல்
பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே *
மெலியும் மட நெஞ்சினார் * தந்து போயின வேதனையே78
சீர் அரசு ஆண்டு * தன் செங்கோல் சில நாள் * செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு ** பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த *
ஓர் அரசே அருளாய் * இருளாய் வந்து உறுகின்றதே80
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.